அசர வைக்கும் ஏகே 61 அப்டேட்கள்...ட்விட்டரை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்
சென்னை : அஜித் நடித்த வலிமை படம் பொங்கலுக்கு வரும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரிலீஸ் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
வலிமை வந்தால் தான் பிழைக்க முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். ஆனால் வலிமை புதிய ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 61 ஷுட்டிங் எப்போ
வலிமை பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படம் பற்றி ரசிகர்கள் பேச துவங்கி விட்டனர். அஜித்தும் திடீரென மும்பை சென்று போனி கபூரை சந்தித்துள்ளதால் ஏகே 61 பட ஷுட்டிங் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக கேட்க துவங்கி விட்டனர்.

டிரெண்டிங்கில் ஏகே 61
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் ஏகே 61 பற்றி வெளியாகி வரும் தகவல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் #AK61 என்ற ஹாஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இத்தனை அப்டேட்டா
தற்போது வரை வெளியாகி உள்ள தகவல்களின்படி, மார்ச் 9ம் தேதி பூஜையுடன் ஏகே ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படம் புதுச்சேரி, ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட உள்ளதாம். மொத்தமாக 7 மாதங்களில் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

தயாராகும் பிரம்மாண்ட செட்
படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட உள்ளதாம். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாம். ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











