For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத் பிறந்த நாள்.... ரசிகர்கள், சேனல்களின் கொண்டாட்டம்!

    By Shankar
    |

    Ajith fans and media plans for Ajith birthday
    சென்னை: எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப ஸ்பெஷலாக இந்த ஆண்டு அஜீத்தின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடவிருக்கிறார்கள்.

    அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தொலைக்காட்சிகள் அஜீத்தின் சிறப்புப் படங்களை வெளியிடுகின்றன. மேலும் சில விசேஷங்களும் அன்றைக்கு நடக்கவிருக்கின்றன.

    விவரமாகப் பார்ப்போமா...

    மே 1ந் தேதி அஜித் பிறந்த நாள் வரவிருக்கிறது. வழக்கம்போல் இந்தப் பிறந்த நாளையும் வெகு விமர்சியாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் தயாராகிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்ததாக அஜீத் அறிவித்தாலும், அதே ரசிகர் மன்றத்தினர் இந்த ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர்.

    அன்னதானம்

    அஜீத் பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்துள்ளனர். வழக்கமான அன்னதானம், இரத்த தானம் போன்றவற்றோடு, கல்வி உதவிகளும் வழங்குகிறார்களாம்.

    அமர்க்களம்

    அன்றைக்கு அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடுகின்றனர்.

    தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறதாம்.

    ஆரம்பம்

    டி வி சேனல்கள் மட்டும் சும்மா இருக்குமா... அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜெயா டிவி ஆரம்பம் படத்தை ஒளிபரப்புகிறது. கடந்த தீபாவளிக்கு வந்த படம் இது. அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்திருந்தனர்.

    வீரம்

    ஜெயாவுக்குப் போட்டியாக ஆரம்பத்தை விட புதிய படமான வீரம் படத்தைத் திரையிடவிருக்கிறது சன் டிவி. இந்தப் படத்தில் தமன்னா அஜீத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான படம் இது.

    புதுப்பட போஸ்டர்

    இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி மே 1ந் தேதி கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்களாம்.

    English summary
    Fans and media have planned to celebrate Ajith's birthday with grand manner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X