இந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்!
Recommended Video
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் ஒட்டி வரும் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
தல என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இரண்டு படங்களும் வசூலையும் குவித்தது. ஹெச் வினோத் - போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர் கொண்ட பார்வை தாறுமாறான ஹிட் கொடுக்க அதே கூட்டணி அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தில் இணைகிறது.

நியூ லுக் போட்டோஸ்
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் அஜித்தின் நியூ லுக் போட்டோஸ் வெளியாகி வைரலானது.

தீபாவளிக்கு இல்லை
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது அஜித்தின் படம் ரிலீஸாகும். ஆனால் இந்த தீபாவளிக்கு அஜித்தின் படம் எதுவும் ரிலீஸாகவில்லை.
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
அதே நேரத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
வைரல் போஸ்டர்
இந்நிலையில் அஜித் ரசிகர்கள், ஒட்டிவரும் போஸ்டர் வைரலாகி வருகிறது. அதாவது, "இந்த தீபாவளி வெத்து"
"அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு" என்ற வாசகத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது அந்த போஸ்டர்.
தல வெறியர்கள்
இந்த போஸ்டரை நெல்லை மாவட்ட அஜித் ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். போஸ்டரில் நெல்லை தல வெறியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த மிரட்டும் போஸ்டர் இணையதளத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











