பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!
ஒரு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த அஜித் புகைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்தின் புகைப்படம் இருந்ததற்காக ஒரு பஸ்சுக்கு பாலூற்றி அவரது ரசிகர்கள் அபிஷேகம் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அஜித்துக்கு ரசிகர்கள் பலம் அதிகம். ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ரசிகர்கள் தனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என பலமுறை அஜித் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் அஜித் மீதுள்ள அதீத பாசத்தினால், அவரது ரசிகர்கள், அவ்வப்போது, பாலாபிஷேகம் செய்வது, கட்டவுட் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.

அஜித்துக்கு பாலாபிஷேகம்
இந்நிலையில், ஒரு பேருந்தில் இடம் பெற்றிருந்த அஜித் புகைப்படத்துக்கு, அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனை வீடியோ எடுத்து ரசிகர் ஒரு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், "தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று தல அஜித்", என அவர் குறிப்பிட்டிருந்தார்.
வைரல் வீடியோ
அஜித் ரசிர்களிடையே இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அஜித்துக்கு மட்டுமே இது சாத்தியம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். "மரண மாஸ், தல வேற லெவல், கெத்து", இப்படி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட்
இந்த சம்பவம் நடைபெற்றது வத்தலகுண்டு பேருந்து நிலையம் என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். அஜித் ரசிகர்கள் திடீரென கொண்டாட்டத்தில் இறங்கியதால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சகஜ நிலை திரும்பியது.

அஜித் விரும்பமாட்டார்
அஜித்துக்காக ரசிகர்கள் இவ்வாறு செய்தாலும், அவர் இதனை விரும்புவதில்லை. அரசியல் நடவடிக்கை தொடர்பாக அஜித் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூட, தனது ரசிகர்கள் அவரவர் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும் என்றே கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











