வலிமை அப்டேட்களை வாரி வழங்கும் போனி கபூர்.. போட்டோ மீம்களை போட்டு திணறவிடும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: வலிமை அப்டேட் என இனிமேல் எந்தவொரு அஜித் ரசிகரும் கேட்கக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு 2 புரமோக்களை வெளியிட்டு கெத்துக் காட்டி வருகிறார் போனி கபூர்.
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வரும் போனி கபூருக்கு ஏகப்பட்ட போட்டோ மீம்களை போட்டு அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதை ஜாலியாக இங்கே பார்க்கலாம்..
குட் vs ஈவில்
நல்லதுக்கு இருக்கும் சக்தி மற்றும் கெட்டதுக்கு இருக்கும் சக்தி என இரண்டுக்கும் இடையிலான போராட்டம் தான் வலிமை திரைப்படம் என்பதை உணர்த்தும் வகையிலான அட்டகாச ஆக்ஷன் புரமோவை மாலை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு அஜித் ரசிகர்களை குளிரவைத்து இருந்தார்.
பாச புரமோ
இந்நிலையில், சற்று முன் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலின் காட்சிகள் அடங்கிய பாச புரமோவை போட்டு அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து விட்டார் தயாரிப்பாளர் போனி கபூர். தலைவா! உன்னையா நாங்க திட்டுனோம் என மன்னிப்பு கேட்டு அஜித் ரசிகர்கள் போட்டோ மீம்களை குவித்து வருகின்றனர்.

பூஷ்பா மீம்
போனி ஃபிளவர் இல்லடா.. ஃபயர் என புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் வசன மீமை போட்டு அஜித் ரசிகர்கள் வலிமை பட தயாரிப்பாளரை கொண்டாடி வருகின்றனர். இன்னும் கைவசம் இப்படி ஒரு வாரத்துக்கு எத்தனை புரமோ வச்சிருக்கீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தலைவன் வந்துட்டான்
என் தலைவன் வந்துட்டான்யா.. வந்துட்டான் என அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரின் புகைப்படங்களை போட்டே உருவாக்கி உள்ள போட்டோ மீம்களை அவரது ட்வீட்டுக்கு கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு அவரை அன்பால் திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.

சும்மா பத்தி எரியுது
அப்டேட்டாடா கேக்குறீங்க.. இந்தா வாங்கிக்கோங்க என அஜித் குமார் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த வலிமை புரமோக்களை வெளியிட்டு சும்மா இணையத்தை பத்தி எரிய விட்டுள்ளார் போனி கபூர். ஒரே நாளில், விஜய், சூர்யா, அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் அப்டேட்களால் சமூக வலைதளங்கள் படாதபாடு பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











