நோ மீன்ஸ் நோ.. என்கவுன்டர் செய்த தெலுங்கானா போலீஸ்க்கு போஸ்டர் ஒட்டி வாழ்த்து சொன்ன அஜித் ஃபேன்ஸ்!
சென்னை: பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டரில் போட்டுதள்ளிய தெலுங்கானா போலீசாருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் கடந்த 27ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். எரிக்கப்பட்ட நிலையில் கரிக்கட்டையாக அவரது உடல் 28ஆம் தேதி ஷம்சாபாத் பாலத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் லாரி ஓட்டுநர், கிளினர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்று உடலை எரித்ததை ஒப்புக்கொண்டனர்.

நாடாளுமன்றம்
அவர்கள் நான்கு பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் கொல்ல வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

என்கவுன்டர்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது.

போஸ்டர்
திரைத்துறையை சேர்ந்த பலரும் என்கவுன்டரில் 4 பேரும் கொல்லப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே போயி போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள்
என்கவுன்டர் செய்த சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நோ மீன்ஸ் நோ என ஆணையர் சஜ்னாரின் போட்டோவை போட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











