அலகு குத்தி தொங்கியபடி துணிவு பட கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம்.. மாலை அணிவித்த அஜித் ரசிகர்கள்!

காஞ்சிபுரம் : நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்.

படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. ரசிகர்களும் தங்களது பங்கிற்கு படத்தை பிரமோட் செய்து வருகின்றனர்.

நாளை வெளியாகும் துணிவு படம்

நாளை வெளியாகும் துணிவு படம்

நடிகர் அஜித்தின் துணிவு படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் முன்னதாக தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்ட நிலையில் படத்தின் சூட்டிங் தள்ளிப்போய் தற்போது பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் கவர்ந்த ட்ரெயிலர்

ரசிகர்கள் கவர்ந்த ட்ரெயிலர்

படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், நாளைய தினம் வெளியாகவுள்ள படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக ஹெச் வினோத், போனிகபூருடன் அஜித் இணைந்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து துணிவு படம் உருவாகியுள்ள நிலையில், முன்னதாக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அளவில் வங்கி மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாகப்பட்டினம், பாங்காக், சென்னை ஆகிய இடங்களிலும் சூட்டிங் நடத்தப்பட்டது. ஜிப்ரான் இசையில் படத்தின் பாடல்களும் கவனத்தை பெற்றுள்ளன.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

படத்தின் பிரமோஷனையொட்டி படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் பேட்டிகளை அளித்து வருகின்றனர். இதனிடையே ரசிகர்களும் தங்களது பங்கிற்கு படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலகு குத்தி பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

அலகு குத்தி பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

கடலில் நடுவில் துணிவு படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேனர்கள் வைப்பது, திரையரங்குகளில் அலங்காரம், கட்அவுட் என ரசிகர்கள் மாஸ் செய்து வருகின்றனர். இதனிடையே காஞ்சிபுரத்தில் அஜித்தின் துணிவு பட கட்அவுட்டிற்கு கிரேனில் அலகுகுத்தி தொங்கியபடி பாலாபிஷேகம் செய்த அஜித் ரசிகர்கள் மாலையும் அணிவித்துள்ளனர்.

 அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள்

அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள்

அஜித் தன்னுடைய படங்களுக்கு அதிகமான அளவில் பிரமோஷன்களை செய்ய மாட்டார். அதிகமான பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதை தவிர்த்து விடுவார் என்றபோதிலும் அவரது ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமானது. அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதை புரிந்துக் கொண்டுள்ள அஜித், தற்போது அதிகமாக ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X