'தல' ரசிகர்கள் வெளியிட்ட பில்லா பாண்டி டீஸர்: தலயை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க மாட்டேன்

By Siva

சென்னை: ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தின் டீஸரை அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

சரவண சக்தி இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பில்லா பாண்டி. படத்தில் அஜித் ரசிகனாக இல்லை இல்லை அஜித் வெறியனாக நடித்துள்ளார் சுரேஷ்.

இந்நிலையில் பில்லா பாண்டி படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

டீஸர்

பில்லா பாண்டி டீஸரை சுரேஷ் பெரிய பிரபலங்களை வைத்து வெளியிடவில்லை. மாறாக அஜித் ரசிகர்களை வைத்து வெளியிட்டுள்ளார். சும்மாவே பில்லா பாண்டியை கொண்டாடுவார்கள் தல ரசிகர்கள் இதில் அவர்களையே வெளியிட வைத்தால் சொல்லவா வேண்டும். டீஸர் வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாகிவிட்டது.

சுரேஷ்

சிடீஸரில் ஒரே அடிதடியாக உள்ளது. எடுத்த உடனே தல வந்து தெறிக்க விடலாமா என்று கேட்கும் வேதாளம் பட காட்சி வருகிறது. டீஸரில் என் 'தல'யை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க மாட்டேன் என்று கூறுகிறார் ஆர்.கே. சுரேஷ். இந்த டீஸரை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஆர்த்தி

தல ரசிகையான நடிகை ஆர்த்தி பில்லா பாண்டி டீஸரை பார்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியதுடன் சுரேஷையும் பாராட்டியுள்ளார்.

பாராட்டு

பில்லா பாண்டி டீஸர் அருமை என்று திரையுலக பிரபலங்கள் சுரேஷை பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X