வலிமை அப்டேட் எங்கே...எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்

டைரக்டர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பஸ்ட்லுக் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்து விட்டது. இந்நிலையில் படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெயினில் படமாக்க டைரக்டர் வினோத் திட்டமிட்டுள்ளார்.

Ajith fans request TN Chief Minister for Valimai update

ஆனால் கோவிட் 19 ன் இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் படக்குழு திணறி வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வந்தாலும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்து அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனால் பொறுமையிழந்த ரசிகர்கள், வலிமை அப்டேட் என்னாச்சு என தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து கேட்டுள்ளனர். அதனால் கட்சி கூட்டம் முழுவதும் அஜித் ரசிகர்களின் முழக்கமாகவே இருந்தது.

முதல்வரின் காரை மறித்து வலிமை அப்டேட் பற்றி அஜித் ரசிகர்கள் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X