நீங்களாவது அப்டேட் வாங்கிக் கொடுங்க அக்கா.. குஷ்புவிடம் கெஞ்சும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: தல அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூருடன் எடுத்த புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போனி கபூருடன் குஷ்புவை பார்த்த அஜித் ரசிகர்கள், அக்கா நீங்களாச்சும் வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க என கெஞ்சி வருகின்றனர்.

குஷ்புவின் அந்த புகைப்படத்திற்கு கீழே, மொத்தமும் தல ரசிகர்களின் கோரிக்கை கமெண்ட்டுகள் தான் இருக்கின்றன.

ரொம்ப பாவம்

ரொம்ப பாவம்

தளபதி விஜய்யின் மாஸ்டர் பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், அஜித்தின் வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காதது, தல ரசிகர்களை ரொம்பவே கஷ்டப்படுத்தி வருகிறது. ஒரு அப்டேட் வரும், நாமும் ட்விட்டரில் நம் பலத்தை காட்டலாம் என அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தயாரிப்பு தரப்பு செவி சாய்க்கவே இல்லை.

செம காண்டு

செம காண்டு

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, வலிமை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது, அஜித் ரசிகர்கள் செம காண்டில் இருக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வலிமை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காததே அவர்களின் கோபத்திற்கான காரணம்.

போனி கபூருடன்

இந்நிலையில், வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும், குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை சூழ்ந்துக் கொண்டு வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

மேடம் அப்படியே

அடிச்சு கூட கேப்பாங்க.. அப்பவும் வலிமை பத்தியோ, வலிமை அப்டேட் பத்தியோ மட்டும் சொல்லிடாதீங்க என இந்த ரசிகர், நடிகை குஷ்புவையே கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். மேலும், சிலர் தயாரிப்பாளர் போனி கபூரை கலாய்த்தும், திட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அடிச்சு கூட கேப்பாங்க

அடிச்சு கூட கேப்பாங்க.. அப்பவும் வலிமை பத்தியோ, வலிமை அப்டேட் பத்தியோ மட்டும் சொல்லிடாதீங்க என இந்த ரசிகர், நடிகை குஷ்புவையே கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். மேலும், சிலர் தயாரிப்பாளர் போனி கபூரை கலாய்த்தும், திட்டியும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இங்க என்ன பண்ற

யோவ்.. அப்டேட் கேட்டா.. இங்க என்னையா பண்ற என இந்த தல ரசிகரும், வடிவேலுவின் காமெடி மீமை போட்டு கலாய்த்து வருகிறார். வலிமை படத்தின் ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து அடிபட்டதாக வந்த செய்தியை தொடர்ந்து, வலிமை அப்டேட்காக அஜித் ரசிகர்கள் என்னேரமும் சமூக வலைதளங்களில் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

கையெடுத்து கும்பிடுறோம்

குஷ்பு மேடம், வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூருடன் தங்களை கண்டதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. வலிமை பத்தி ஏதாச்சும் பேசிக்கிட்டீங்களா? போனி கபூர் உங்ககிட்டயாவது எதாச்சும் சொன்னாரா? என கையெடுத்து கும்பிட்டு கேட்கும் அளவிற்கு வீடியோ போட்டு அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டுக்காக ஏங்கி வருகின்றனர்.

கடுப்பாகுமா ஆகாதா?

அஜித் ரசிகர்கள் தினம் தோறும் வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை இயக்குநர் எச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டவர்களிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. யார் ஹீரோயின், யார் வில்லன் என்பது கூட தெரியவில்லை. இப்படி இருந்தால், கடுப்பாகுமா.. ஆகாதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X