அட கமலை ஒரு தடவைத்தான் புகழ்ந்தார் ப்ளூ சட்டை மாறன்.. நெட்டிசன்களின் சேட்டையை பார்த்தீங்களா?
சென்னை: என் திறமையை காட்டி ரசிகர்களிடம் காசு வாங்குவேனே தவிர என் புண்ணை காட்டி பிச்சைக்காரனை போல காசு வாங்க மாட்டேன் என நடிகர் கமல் சமீபத்தில் பேசிய வீடியோவை ஷேர் செய்து பார்த்திபனை வம்புக்கு இழுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
அந்த வீடியோவை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பங்கமாக கலாய்க்க, பதிலுக்கு அஜித் ரசிகர்கள் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பண்ண புரமோஷன் வீடியோவை தேடிப் பிடித்து எடுத்துப் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கமலை பாராட்டுவதே அரிது. அப்படி பாராட்டிய நிலையில், அதற்குள் இப்படியா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

புண்ணைக் காட்டி
எனக்கு கால் ஒடஞ்சி இருந்தாலும், நல்லா ஆடுறேனா என்பதை தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரனை போல, எனக்கு காலில் இந்த இடத்துல அடிபட்டு இருக்குன்னு என் புண்ணை காட்டி காசு வாங்க மாட்டேன், என் திறமையை காட்டி காசு வாங்கணும் என கமல்ஹாசன் சமீபத்தில் பேசிய பேட்டியை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்திருந்தார்.

கமலுக்கு பாராட்டு
"கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கைப்படம் தருவதை விட இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது World's 1st, கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன், 24 Hrs தூங்கவில்லை என்று அனுதாபம் தேடும் அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக பொருந்தும். Practical and frank statement by Kamal." என ப்ளூ சட்டை மாறன் கமலை பாராட்டி இருந்தார்.

அஜித் vs விஜய் ரசிகர்கள் சண்டை
ப்ளூ சட்டை மாறன் போட்ட அந்த ட்வீட்டுக்கு கீழ், ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள், அப்படி செய்றது நடிகர் அஜித் தான் என ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும், முதுகுல ஆப்பரேஷன், சூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கினார் அஜித் என போட்டே புரமோஷன் பண்றாங்க என கலாய்த்தனர்.

சிம்பதி பிச்சை
"யோவ் மாறா.. இந்தா உங்க கமல்ஹாசன் Sympathy பிச்சை எடுத்த போது.." என ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள், கமலே விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக தனது காலில் ராடு வைத்திருந்ததை பற்றி பேசிய வீடியோ க்ளிப்ஸை ஷேர் செய்து பதிலடி கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











