Mankatha: அஜித் டயலாக் பேசிய தர்பூசணி திவாகர்.. டேய்.. டேய் என கத்திய மதுரை அஜித் ரசிகர்கள்
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படமான மங்காத்தா படம் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. எக்ஸ் பக்கத்திற்குள் நுழைந்தாலே மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தொடர்பான கொண்டாட்டங்கள் தான் குவிந்து காணப்படுகிறது. இப்படி இருக்கையில் சமூக வலைதளப் பிரபலம் மற்றும் பிக்பாஸ் புகழ் வாட்டர்மெலன் ஸ்டார் மதுரையில் மங்காத்தா படத்தை பார்க்க வந்த போது, ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் சினிமா டயலாக்குகளை பேசினார். அப்போது அஜித் ரசிகர்கள் வாட்டர் மெலன் திவாகரை நோக்கி, ' டேய்.. டேய்..' என்று கத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, மகத், வைபவ், பிரேம் ஜி, ராய் லக்ஷ்மி, அஞ்சலி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் அஜித்தின் 50 வது படமாக வெளியானது. படம் வெளியான கால கட்டத்திலேயே பெரும் வெற்றியை குவித்தது. இந்நிலையில் ரீ ரிலீஸை ரசிகர்கள் புது படம் ரிலீஸ் ஆவதை போல கொண்டாடி வருகிறார்கள்.

தர்பூசணி திவாகர்: இந்நிலையில் மதுரையிலும் சுமார் 10 தியேட்டர்களுக்கு மேல் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கிடையில் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸைப் பார்க்க வந்த வாட்டர் மெலன் திவாகர், அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த மேடையில் ஏறி, அஜித் பேசிய சினிமா வசனங்களைப் பேசினார். குட் பேட் அக்லி மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் அஜித் பேசிய வசனங்களைப் பேசினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அஜித் ரசிகர்கள் , ' டேய்... டேய்..' என்று கத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மதுரையில் அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தை கொண்டாடி வரவேற்றுள்ளனர்.

வசூல்: மங்காத்தா படம் ரீ ரிலீஸில் அதிக வசூல் குவித்த படமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புக் மை ஷோவில் மட்டும் கடைசி நான்கு நாட்களில் ஒரு லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளது. இது இல்லாமல் டிஸ்ட்ரிக்ட் செயலியிலும் பெருவாரியான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











