»   »  'அப்பா உனக்கு ஸ்பீடு பத்தல' அஜீத்தை கலாய்க்கும் குட்டிதல

'அப்பா உனக்கு ஸ்பீடு பத்தல' அஜீத்தை கலாய்க்கும் குட்டிதல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் மார்ச் 2ம் தேதி நடிகர் அஜீத்- ஷாலினி தம்பதிகளின் மகன் ஆத்விக் குமார் தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார்.

ஆனால் அதற்குள் ஆத்விக்கின் பிறந்த நாளுக்கு விதவிதமாக போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளங்களை வழக்கம் போல தங்கள் பாணியில் தெறிக்க விட்டு வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

அந்தப் போஸ்டர்களில் வித்தியாசமான இந்தப் போஸ்டரை ரசிகர்கள் மட்டுமின்றி அஜீத் பார்த்தாலும் சிரித்து விடுவார். அதாவது பைக் ரேஸரான அஜீத்தை, ஆத்விக் தனது குட்டி பைக்கில் முந்திச் செல்கிறார்.

அதைவிட 'அப்பா உனக்கு ஸ்பீடு பத்தல' என்று ஆத்விக், அஜீத்தை கலாய்ப்பது போன்று இந்தப் போஸ்டரை உருவாக்கி தங்களது ஆத்விக் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள்.

இது மட்டுமின்றி ஆத்விக்கிற்கு கட்அவுட்களை உருவாக்கியும், பிறந்த நாளில் அன்னதானம் வழங்கவும் அஜீத் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இப்பொழுதே இப்படி என்றால் ஆத்விக்கின் பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடப் போகிறார்களோ?

English summary
Ajith Fans Start Birthday Celebrations for Kutty Thala Aadvik Ajith Kumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil