இதுதான் ரியல் ஃபேன் வார்.. கைதிக்கு டிக்கெட் போடும் அஜித் ரசிகர்கள்!

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாகவுள்ள கார்த்தியின் கைதி படத்திற்கு டிக்கெட் எடுத்து வருவதாக, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை: சமூக வலைதளங்களை தாண்டி அஜித், விஜய் ரசிகர்களின் ஃபேன் வார் தற்போது சினிமா டிக்கெட் புக்கிங்கிலும் ஆரம்பித்து விட்டது.

பிகில் படத்திற்கு இணையாக கார்த்தியின் கைதி படத்தை வெற்றி பெற வைக்கும் நோக்கில் ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் இணைந்துள்ளனர்.

தற்போது, அஜித் ரசிகர்களும் கைதி படத்திற்கு டிக்கெட் எடுத்து வருவதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

கார்த்தியின் கைதி மற்றும் விஜய்யின் பிகில் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. ஆனால், சிறப்பு காட்சி வெளியாகுமா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு, சிறப்பு காட்சிகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக அனுமதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேன் வார்

சமூக வலைதளங்களில் தலையா தளபதியா என்ற போட்டி அவ்வப்போது நடப்பது வழக்கம். சமீபத்தில் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை அடி தடி பிரச்னை வரை மிகப்பெரிய அளவில் சென்றது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது அந்த ஃபேன் வார் கார்த்தியின் கைதி படத்திற்கு கை கொடுக்கும் என தெரிய வந்துள்ளது.

வெறுப்பேற்ற

வெறுப்பேற்ற

விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற அஜித் ரசிகர்கள், கார்த்தியின் கைதி படத்திற்கு இந்த தீபாவளிக்கு டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் வெளியாகவுள்ள பிகில் படத்தை விட லோகேஷ் கனகராஜ் தரமான படத்தை கொடுத்திருப்பார் என்பது தான் அவர்களது வாதமாக இருக்கிறது.

ஏற்கனவே

ஏற்கனவே

கார்த்தியின் கைதி படத்தை இந்த தீபாவளிக்கு வெற்றி பெற வைக்க ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது அஜித் ரசிகர்களும் கைதி படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கைதி படத்திற்கு டிக்கெட்டுகளை புக் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இருமடங்கு லாபம்

இருமடங்கு லாபம்

180 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பிகில் திரைப்படத்திற்கான லாபம் அந்த படத்திற்கு கிடைக்கும் என்றும், கம்மி பட்ஜெட்டில் தரமான படமாக வந்துள்ள கார்த்தியின் கைதி படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X