லேட்டான வலிமை ரிலீஸ்.. சேலத்தில் திரையரங்கை சூறையாடிய அஜித் ரசிகர்கள்.. ஷட்டரை உடைத்து அராஜகம்!

சென்னை: சேலத்தில் உள்ள ARRS மல்டிபிளக்ஸ் திரையரங்கை அஜித் ரசிகர்கள் சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

சேலம்: 'வலிமை'.. லேட்டாக போட்டதால் வந்த வினை… தியேட்டரை துவம்சம் செய்த ரசிகர்கள்!

வலிமை படம் வெளியீட்டை முன்னிட்டு பல திரையரங்குகள் தியேட்டர் ஸ்க்ரீனுக்கு முன்பாக ஆணிகளை அடித்து வைத்திருந்தனர்.

ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். அதையும் மீறி சேலம் தியேட்டரை அஜித் ரசிகர்கள் சூறையாடி இருப்பதற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

வலிமை கொண்டாட்டம்

வலிமை கொண்டாட்டம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் குமாரின் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் மீது மிகபெரிய எதிர்பார்ப்பை கொண்ட ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சிக்கே முட்டி மோதிக்கோண்டு தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். பாலாபிஷேகம், பட்டாசு வெடிப்பது, பைக் ஸ்டன்ட் செய்வது என FDFS கொண்டாட்டத்தை தியேட்டர் அதிபர்களே அஞ்சும் அளவுக்கு தெறிக்கவிட்டனர்.

சேலத்தில் களைகட்டிய வலிமை

சேலத்தில் களைகட்டிய வலிமை

சேலம் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஐந்து திரைகளிலும் வலிமை திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அஜித் ரசிகர்களுக்கு வசதியாக சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஷட்டரை உடைத்த ரசிகர்கள்

ஷட்டரை உடைத்த ரசிகர்கள்

ஆனால் திரைப்படம் ஒளிபரப்பு செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கில் இருந்த கண்ணாடிகள் மற்றும் இரும்பு ஷட்டரை உடைத்து எறிந்துவிட்டு திரை அரங்கினுள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அரை மணி நேரம் தாமதமாக படம் திரையிடப்பட்டது.

ஏகப்பட்ட கலாட்டாக்கள்

ஏகப்பட்ட கலாட்டாக்கள்

அஜித் படம் வெளியாகிறது என்றால் இதுபோன்ற ஏகப்பட்ட கலாட்டாக்கள் இருக்கும் என்பதை தியேட்டர் ஓனர்கள் அறிந்து கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்த நிலையில், சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் ரசிகர்கள் அத்துமீறியது ஏற்புடையது அல்ல என்றும் இதனை நடிகர் அஜித் கொஞ்சமும் விரும்ப மாட்டார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

ரசிகர்களுக்காக

ரசிகர்களுக்காக

ரசிகர்களுகாக ஏகப்பட்ட வசதிகளை தியேட்டர் நிர்வாகம் செய்து கொடுத்து வரும் நிலையில், இப்படி வீணாக சேதங்களை செய்தால், அடுத்த காட்சிக்கு அஜித் படத்தை ஆர்வத்துடன் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அது இடையூறாக மாறிவிடும் என்பதால், அஜித் ரசிகர்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டை கடைபிடிக்க காவல்துறையும் அத்துமீறியவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X