ஹர்பஜன் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. வேற லெவலில் ட்ரெண்ட் செய்யும் தல ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: மாடர்ன் தாளியில் ஸ்மார்ட் போன் வைக்கவும் ஒரு இடம் இருக்கிறது என போட்டோவுடன் நடிகர் ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட்டை, அஜித் ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரராக இந்திய அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் என கலக்கி வந்த நம்ம ஹர்பஜன் சிங், லாஸ்லியாவுடன் இப்போ டூயட் பாடி வருகிறார்.

ஹர்பஜன் பதிவிடும் தமிழ் ட்வீட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போ அவர் போட்ட ட்வீட் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

இனிமே ஹீரோ தான்

இனிமே ஹீரோ தான்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் என இவரை அழைப்பதை விட்டுவிட்டு இனிமே ஹீரோ ஹர்பஜன் சிங் என்று தான் அழைக்க வேண்டும். சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஹர்பஜன் சிங்.

மாடர்ன் தாளி

மாடர்ன் தாளி

தமிழில் சுவாரஸ்யமான ட்வீட்களை போட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், இப்போ லேட்டஸ்ட்டா, மாடர்ன் தாளி என ஒரு ட்வீட்டை தட்டி விட்டுள்ளார். மினி டிபன் போன்றவற்றை வைப்பதற்காக, ஏகப்பட்ட சிறு அடுக்குகள் அடங்கிய தட்டில், ஸ்மார்ட் போனை வைத்து ஒருவர் நோண்டிக் கொண்டே சாப்பிடும் போட்டோ தான் அது.

டிரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்

டிரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்

ஹர்பஜன் சிங் போட்ட இந்த ட்வீட்டை திடீரென தல அஜித் ரசிகர்கள் வைரலாக்க தொடங்கினர். என்னடா ஆச்சு, தல அஜித் பற்றி ஒரு வரி கூட ஹர்பஜன் சிங் போடலையே என்ன மேட்டருன்னு உற்று நோக்கினால், தான் தெரிகிறது, அந்த ஸ்மார்ட் போனில், தல அஜித்தின் விஸ்வாசம் பாடல் காட்சி இடம்பெற்றிருப்பது. இது போதாதா அஜித் ரசிகர்களுக்கு..

கம்பேரிசன்

கம்பேரிசன்

மத்தவங்க அந்த தட்டில் உள்ள உணவுகளை தான் பார்ப்பார்கள். ஆனால், உண்மையான தல ரசிகர்கள் தான் அந்த போனில் உள்ள தல அஜித்தின் விஸ்வாசம் ஸ்டில்லை பார்ப்பார்கள் என கம்பேரிசன் எல்லாம் பண்ணி ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X