Ajith: விஜய் பிறந்தநாளிலும் விடாமுயற்சியை விடாத அஜித் ரசிகர்கள்.. என்ன டிரெண்டாகுது பாருங்க!

சென்னை: அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் சைலன்ட்டாக வேற எதையுமே டிரெண்ட் செய்யாத நிலையில், விஜய் பிறந்தநாளில் கூட விடாமல் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி ஹாஸ்டேக்கையும் #MyDearAJITHKUMAR ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாரிசு படத்தை முந்திக் கொண்டு அஜித்தின் துணிவு படம் நள்ளிரவு காட்சியாக வெளியானது. ஆனால், அதன் பின்னர் நடிகர் விஜய் லியோ படத்தை ஆரம்பித்து ஷூட்டிங்கையே இந்த மாத இறுதியில் முடிக்கப் போகிறார்.

அடுத்ததாக தளபதி 68 படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு இயக்குநரையும் அறிவித்து விட்டார்.

Ajith fans trending #MyDearAJITHKUMAR on Vijays birthday

ஆரம்பிக்காத அஜித் படம்: ஆனால், துணிவு படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கிய நிலையில், அடுத்த பட இயக்குநரை மாற்றிய நடிகர் அஜித் குமார் தனது பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உத்தரவிட்டார்.

ஆனால், அதன் பின்னர் இன்னமும் விடாமுயற்சி படம் எப்போது ஆரம்பிக்கப் போகிறது என்கிற தகவலே இல்லாத நிலையில், விஜய் பிறந்தநாளில் கூட இப்படி நெகட்டிவிட்டியை பரப்புகின்றீர்களே என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிரெண்டாகும் அஜித் ஹாஷ்டேக்: #MyDearAJITHKUMAR ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட்கள் வெளியாகி வரும் சந்தோஷத்தில் ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அஜித் ரசிகர்கள் இப்படி அலப்பறை செய்து வருவதாக நெட்டிசன்களே கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் கிளாஷ் மட்டும்தான்: விஜய் ரசிகர்களுக்கு செம டஃப் கொடுப்பது அஜித் ரசிகர்கள் மட்டும் தான் என்றும் சினிமாவில் விஜய்க்கு அஜித் டஃப் கொடுக்க எவ்வளவு முயன்றாலும் முடியவில்லையே ஏன் என்றும் விஜய் ரசிகர்களுக்கு பதிலுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.

வழக்கம் போல இரு நடிகர்களின் ரசிகர்களும் கெட்ட வார்த்தைகள் தொடர்ந்து ஆபாச போட்டோ மீம்களையும் போட்டு சோஷியல் மீடியா சண்டையை பெரிது படுத்தி வருகின்றனர்.

விஜய் பர்த்டே ஹாஷ்டேக்கை நொறுக்கியாச்சு: டிரெண்டிங் என்று வந்து விட்டாலே அஜித் ஆர்மியை அடித்துக் கொள்ள முடியாது. விஜய் பிறந்தநாள் ஹாஷ்டேக்கை சும்மா ஒரு கேஷுவல் ஹாஷ்டேக் போட்டே காலி செய்து விட்டோம் என அஜித் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X