யங் அண்ட் ஸ்மார்ட் லுக்கில் தல… தாரமான அப்டேட்… வலிமை திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள் !

சென்னை : கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அலுத்து போயிறுத்த ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது படக்குழு.

இந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தெறிக்கவிட்டு வலிமை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பேப்பர் சால்ட் லுக்கில் பார்த்து விட்டு தற்போது யங் அண்ட் ஸ்மாட்டாக வரும் அஜித்தை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

இயக்கம்

இயக்கம்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

இப்படத்திற்கான பூஜை 2019ம் ஆண்டு போடப்பட்டது. வலிமை படம் தொடக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் அரசியல் வாதியின் பிரச்சாரக்கூட்டத்திலும், கிரிக்கெட் மைதானத்திலும், சமீபத்தில் கால்பந்தாட்ட போட்டியிலும், இன்னும் ஒருபடி மேலே போய் பூசாரியிடம் அப்டேட் கேட்டு வந்தனர்.

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்பு தற்போது நிறைவேறி உள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வெறித்தனமாக பைக் ஓட்டுகிறார். மோஷன் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

யங் அண்டு ஸ்மார்ட்

யங் அண்டு ஸ்மார்ட்

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலே தலயின் ரசிகர்கள் அதை வலிமை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். யங் அண்டு ஸ்மார்ட் லுக்கில் இருக்கு அஜித்தை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து மோஷன் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். இரண்டு வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி, தாரமான அப்டேட் என்றும், நிம்மதி பெருமூச்சுவிட்டு மகிழ்ச்சியை வலைத்தளத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X