வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்! #Valimai, #வலிமை
Recommended Video
சென்னை: அஜித்தின் 60வது படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அதனை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத்தும், அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரும் இணைந்து இப்படத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில் இதே கூட்டணி அஜித்தின் 60வது படத்திலும் இணைவதாக தகவல் வெளியானது.
இதில் நடிக்கும் அஜித்தின் நியூ லுக் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் படத்தின் பூஜை என்று நடைபெறும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காலை முதலே thala60poojaday என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்துவந்தனர்.
இந்நிலையில் படத்தின் பூஜை நிறைவடைந்த நிலையில் அஜித் நடிக்கும் 60வது படத்தின் பெயர் வலிமை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #வலிமை #Valimaiஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. இதேபோல் AK60, #THALA60PoojaDay ஆகிய ஹேஷ்டேக்குகளையும் போட்டி போட்டுகொண்டு ட்ரென்ட்டாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்குகளால் டிவிட்டர் வலைதளம் திக்குமுக்காடி வருகிறது.
அஜித்தின் வாழ்க்கை
#வலிமை என்றது வெறும் வார்த்தை இல்ல
அது அஜித்தோட வாழ்க்கை, மன உறுதி, விடாமுயற்சி என்று குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர்.
இன்று வலிமை
நேற்று #பிகில் தீபாவளி #கத்தி தீபாவளி
இன்று #வலிமை #தல60
நாளைக்கு எந்த படம் அப்டேட் வரப்போகுதோ.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
வலிமையை காட்றோம்
இன்னைக்கு நைட்டுகுள்ள ஒரு மில்லியன் டீவீட்ஸ் போடுறோம்
நம்ம #வலிமையை காட்ற நேரம் இது.. என்று கூறுகிறார் இவர்.
சுமைகள் குறைய கண்டேன்
வரிகளில் வலிமை கண்டதால் வலிகளின் சுமைகள் குறைய கண்டேன்.. என்று கூறுகிறார் இவர்.
டீமும் வலிமைதான்
#வலிமை.. நம் தலைப்பு மட்டும் வலிமை இல்லை.. நம் டீமும் வலிமையானதுதான்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வலிமையாய் எங்கள் தல
அன்பு காட்டுபவர்களிடம் எளிமையாய் எதிர்ப்பவர்களிடம் #வலிமையாய் எங்கள் தல.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஆரம்பிப்போம் சம்பவத்தை
தலயின் 60வது படத்தில் வலிமையை காமிப்போம்....அந்த வலிமை என்கிற பெயர்க்கு இப்போவே ஆரம்பிப்போம் சம்பவத்தை... என்று கூறுகிறார் அஜித்தின் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











