அந்த ’விரைவில்’ எப்போங்க? காலையிலேயே #ValimaiFLFeastSoon ஹாஷ்டேக் கொடியை தூக்கிய தல ரசிகர்கள்!
சென்னை: தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் தல அஜித் கூடிய விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வரும் அதுவரை பொறுமையாக கண்ணியத்தை கடைபிடிங்க என சொன்ன நிலையில், சற்று அமைதியாக இருந்த தல அஜித் ரசிகர்கள், தற்போது #ValimaiFLFeastSoon என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள வலிமை படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
ஆனால், இன்னமும் ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை கூட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பாவம் ரசிகர்கள்
வலிமை படத்தின் 95 சதவீத ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இன்னமும் தல ரசிகர்களுக்காக ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை கூட படக்குழு வெளியிடவில்லை. அவர்களும் முருகக் கடவுள், முதல்வர், மொயின் அலி, பிரதமர் மோடி என பலரிடமும் அப்டேட் கேட்டு அலுத்துப் போய்விட்டனர். ஆனாலும், படக்குழு இன்னமும் எப்போது ஃபர்ஸ்ட் லுக் வரும் என்கிற அறிவிப்பை கூட அறிவிக்கவில்லை.

கண்டித்த அஜித்
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தல ரசிகர்களின் கோரிக்கையும் வலிமை படத்தின் அப்டேட்டை நோக்கியே உள்ள நிலையில், தனது ரசிகர்கள் போர்வையில் அப்டேட் கேட்டு சிலர் தொல்லை தருகின்றனர் என்கிற கோணத்தில் நடிகர் அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை அஜித் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஆஃப் செய்து விட்டது.

நினைவு படுத்துகின்றனர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித், கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்த நிலையில், தற்போது வலிமை படக்குழுவினருக்கு அதனை நினைவு படுத்தும் விதமாக #ValimaiFLFeastSoon என்கிற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

துப்பாக்கியோட தல
இந்த ஹாஷ்டேக்கில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராஃபி, கன் ஷூட்டிங், சமையல் என சகல கலைகளிலும் வல்லவரான நடிகர் அஜித் துப்பாக்கியோடு நிற்கும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

வரலாறு படைக்க
வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் மாதம் தான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்போ ரிலீஸ் ஆனாலும், வேற லெவலில் அதனை டிரெண்ட் செய்ய ரசிகர்கள் எப்போதும் தயாராக உள்ளனர். எப்போ வரும் என்றாவது தயாரிப்பாளர் போனி கபூர் சொல்லி விட்டால் கூட அஜித் ரசிகர்கள் சந்தோஷமடைவார்கள்.


Click it and Unblock the Notifications











