லீக்கானது வலிமை இன்ட்ரோ பாடல் செட் போட்டோக்கள்.. டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் #ValimaiIntroSong
சென்னை: வலிமை படத்தின் அப்டேட் கேட்டு முருகக் கடவுள் முதல் தமிழக முதல்வர் வரை டார்ச்சர் செய்த தல ரசிகர்களே திக்குமுக்காடும் அளவிற்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கசிந்து வருகின்றன.
Recommended Video
வலிமை படத்தின் அறிமுக பாடலை முடித்து விட்டேன் என யுவன் சங்கர் ராஜா அறிவித்ததே அஜித் ரசிகர்களுக்கு வேற லெவல் எனர்ஜியை கொடுத்தது.
இந்நிலையில், அந்த இன்ட்ரோ பாடல் படமாக்கப்படும் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து தற்போது டிரெண்டாகி வருகிறது.

அடுத்த அதாரு
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாரு அதாரு பாடலை போல வலிமை படத்திலும் ஒரு அட்டகாசமான செலிபிரேஷன் ஓப்பனிங் சாங்கை இயக்குநர் எச். வினோத் தல ரசிகர்களுக்காக படமாக்க உள்ளார். அந்த பாடலுக்காக அமைக்கப்பட்டுள்ள செட் லோகேஷன் காட்சிகள் கசிந்து வைரலாகி வருகின்றன.

அப்டேட் அலப்பறை
வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காத கோபத்தில் தயாரிப்பாளர் என்றும் பாராமல் போனி கபூரை கண்டபடி அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக கழுவி ஊற்றி வந்தனர். போதா குறைக்கு கடவுள் முருகன் மற்றும் தமிழக முதல்வரிடமும் அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர்.

யுவன் தந்த அப்டேட்
தல அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, தனது வெப்சைட்டில் வலிமை படத்தின் முதல் பாடல் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது என்றும், ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அந்த பாடல் தெறி மாஸாக இருக்கும் என ட்வீட் போட அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

லீக்கான பாடல் செட்
இந்நிலையில், தற்போது அந்த அறிமுக பாடலின் ஷூட்டிங் நடக்கும் இடத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி டிரெண்டாகி வருகின்றன. #ValimaiIntroSong என்ற ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் அந்த ஹாஷ்டேக்கை கொண்டு சென்றுள்ளனர். மின் விளக்குகளால் அந்த இடமே அட்டகாசமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் லிரிக்ஸ்
அதாரு அதாரு பாடலுக்கு லிரிக்ஸ் எழுதிய இயக்குநர் விக்னேஷ் சிவனே மீண்டும் தல அஜித்துக்காக வலிமை இன் ட்ரோ பாடலை எழுதியுள்ளார் என்கிற ஹாட் அப்டேட்டும் கிடைத்துள்ளது. கடைசியாக தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் விக்னேஷ் சிவன் எழுதிய க்விட் பண்ணுடா மற்றும் அந்த கண்ண பாத்தாக்கா பாடல் வேற லெவல் ஹிட் அடித்தன.


Click it and Unblock the Notifications











