யார் ரியல் ‘தல’.. தோனி ரசிகர்களுடன் சண்டையிடும் அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #RealBrandTHALAAjith

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், 'தல' தோனி உள்ளிட்ட பல ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வந்தன.

Recommended Video

Dhoni Birthday 2020 | Happy Birthday Dhoni

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் ரசிகர்கள், யார் ரியல் 'தல' என்பதை முடிவு கட்டவேண்டும் என நினைத்து, #RealBrandTHALAAjith என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தோனி ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர்.

வழக்கமாக தல - தளபதி ரசிகர்களுக்கு இடையே சண்டை எழுந்து வந்த நிலையில், தற்போது வித்தியாசமாக தல - தல ரசிகர்கள் மத்தியில் சண்டை எழுந்து இருக்கிறது.

விட்டுக் கொடுக்க மாட்டோம்

விட்டுக் கொடுக்க மாட்டோம்

ஒரு ரசிகனாக எப்போதுமே ‘தல' என்ற டைட்டிலை எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் அஜித் ரசிகர்கள் உறுதியாக இருப்பதை வெளிகாட்டவே இந்த டிவிட்டர் சண்டையை தற்போது நிகழ்த்தி வருகின்றனர். காலை முதலே தோனியின் பிறந்தநாள் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது, #RealBrandTHALAAjith என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே தல

ஒரே தல

'தல' என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், என் குழந்தைக்கு தென்னிந்திய நடிகர் அஜித் என்றே சொல்வேன். வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் தல என்றும், சின்ன தல என்றும் பட்டப்பெயர்களை வைக்க அனுமதிக்க மாட்டோம் என தோனி மற்றும் ரெய்னா ரசிகர்களை வம்படியாக இழுத்து சண்டை போட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

’தல’ தோனி

’தல’ தோனி

சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவர் தான் ரியல் ‘தல' என்று தோனி ரசிகர்களும், தங்கள் பங்குக்கு ஹாஷ்டேக் சண்டையில் இறங்கி வருகின்றனர். தோனி ரசிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாகவும், அஜித் ரசிகர்களுடன் மோதும் சாக்கிலும் விஜய் ரசிகர்களும் ‘தல' தோனி தான் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆவேசமாக

ஆவேசமாக

நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட் வீரர் தோனிக்கும் ரசிகனாக நடு நிலையில், இருக்கும் சிலரையும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், ஒரு அஜித் மற்றும் தோனி ரசிகர், தனது நோட் புத்தகத்தில், தோனியின் புகைப்படங்களையும், அஜித் புகைப்படங்களையும் சிறு வயது முதலே வெட்டி ஒட்டி வந்த புகைப்படத்தை போட்டு, ஆவேசமாக திட்டி இருப்பதும் ஹைலைட் ஆகி இருக்கிறது.

அன்ஃபாலோ

அன்ஃபாலோ

கோலிவுட் பிரபலங்களான வரலக்‌ஷ்மி சரத்குமார், அதுல்யா ரவி, பிரேம்ஜி, அனிருத் உள்ளிட்ட பலரும் தல தோனி என்று போட்டே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தல தோனிக்கு பிறந்தநாள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்ட டிவீட்டை போட்டு, அதை அன்ஃபாலோ செய்வதாக சில ரசிகர்கள் அடம் பிடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X