பொன்னியின் செல்வன் 2-100 கோடி வசூல்... இப்போ இதுவா முக்கியம்... லைகாவை ட்ரோல் செய்யும் அஜித் ஃபேன்ஸ்

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ம் தேதி ரிலீஸானது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

 Ajith fans troll Lyca for announcing that Ponniyin Selvan Part 2 has collected 100

லைகாவின் இந்த அபிஸியல் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் விரக்தியுடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2-100 கோடி வசூல்
கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் 2ம் பாகம் 28ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் பாகத்தை விடவும் பொன்னியின் செல்வன் 2-க்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தே காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1, முதல் நாளில் 80 கோடி வசூலித்திருந்தது. ஆனால், இரண்டாம் பாகம் முதல் நாளில் 60 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்தது. அதேபோல், இரண்டாம் நாளில் இன்னும் குறைவாக 40 கோடி மட்டுமே வசூலித்தது.

ஆனாலும், லைகா தரப்பில் இருந்து அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது பாக்ஸ் ஆபிஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் பார்ட் 1 வசூலை முதல் நாளே அறிவித்த லைகா, இரண்டாம் பாகத்தின் கலெக்‌ஷன் குறைந்ததால், லேட்டாகவே அப்டேட் கொடுத்துள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸ் பற்றிய அபிஸியல் அப்டேட்டை, அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. துணிவு ரிலீஸாகும் முன்பே ஏகே 62 குறித்து அறிவித்திருந்தது லைகா. ஆனால், அதற்கு அடுத்த அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது லைகா.

 Ajith fans troll Lyca for announcing that Ponniyin Selvan Part 2 has collected 100

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்டை இப்போது யார் கேட்டார்கள். நாளை அஜித்தின் பிறந்தநாள் என்ற நிலையில், இன்னும் ஏகே 62 அப்டேட்டை ஏன் வெளியிடவில்லை என டிவிட்டரில் விளாசி வருகின்றனர். ஆனால், அஜித்தின் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக ஏகே 62 அப்டேட் வெளியாகும் என லைகா தரப்பில் சொல்லப்படுகிறது. அஜித்தின் மோஷன் போஸ்டர், டைட்டில் என இரண்டு அப்டேட்கள் வெளியாகவுள்ளதாம்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் 65 கோடி வரையும், இரண்டாம் நாளில் 45 கோடி ரூபாய் வரையும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் 2 ஒட்டுமொத்தமாக முதல் இரண்டு நாட்களில் 110 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் பாகத்தின் வசூல் ரொம்பவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X