அட்லீயை வெளுக்கும் அஜித் ரசிகர்கள்.. விவேக்கின் கோந்து காமெடி தான் ஜவான் படமாம்.. வீடியோ மீம்!
சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் இரண்டு நாட்களில் 236 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் அட்லீ வேற லெவல் என ஷாருக்கானை இந்த அளவுக்கு மாஸாக வேறு எந்த இயக்குநரும் காட்டவில்லை என அட்லீயை பாராட்டி தள்ளி வருகின்றனர்.
குவியும் பாராட்டுக்கள்: இயக்குநர் ராஜமவுலி, டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை கங்கனா ரனாவத், நடிகை ஜெனிலியா உள்ளிட்ட பல பிரபலங்களும் ஜவான் படத்தையும் அட்லீயின் இயக்கத்தையும் புகழ்ந்து வருகின்றனர்.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இயக்குநர் அட்லீயின் படம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வரும் நிலையில், சாதிச்சுட்ட மாறா என விஜய் ரசிகர்களும் அட்லீயை வாழ்த்தி வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் ட்ரோல்: இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் அஜித் நடித்த ஆரம்பம், மங்காத்தா உள்ளிட்ட படங்களின் பக்காவான காப்பி என கிண்டல் செய்து வீடியோ மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

டிவி சேனலில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் நடிகர் கோந்து செய்யும் விவேக்கின் காமெடி வீடியோவை வெளியிட்டு எந்தெந்த படங்களில் இருந்து இயக்குநர் அட்லி சீன்களை சுட்டு ஜவான் படத்தை உருவாக்கினார் என்கிற வீடியோவை போட்டு மரண பங்கம் செய்துள்ளனர்.
அடுத்த படம் யாருடன்: மேலும், ஜவான் படத்தை கலாய்த்து ஏகப்பட்ட மீம்களும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. லாஜிக் என்றால் எத்தனை கிலோ என்று தெரியாத அளவுக்கு இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானையும் ஏமாற்றிவிட்டார் அட்லீ என்ன அடித்து நொறுக்கி வருகின்றனர்.
பல படங்களின் கலவை போல தெரிந்தாலும் படத்தில் சொல்லப்பட்டுள்ள மையக்கருத்து மற்றும் படத்தின் மேக்கிங் தெறிக்க விடும் நிலையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு பக்காவான என்டர்டைன்மென்ட் கன்ஃபார்ம் என்பதை உறுதி செய்திருக்கிறார் அட்லீ.
கடந்த நான்கு படங்களில் என்ன மேஜிக்கை செய்தாரோ அதே மேஜிக் தான் இந்த முறையும் அட்லி பக்காவாக செய்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வருகிறார் என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், அடுத்ததாக அட்லி தளபதி 69 படத்தை இயக்குவார் என்றும் கூறுகின்றனர். அந்த படம் ஜவான் படத்தை விட டபுள் மாஸ் ஆக இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அடுத்து அல்லு அர்ஜுனை தான் அட்லீ இயக்கப் போகிறார் என்றும் அதற்கு அடுத்த படம் தான் விஜய்யுடன் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











