இப்போ வருமோ.. எப்போ வருமோ.. கடுப்பான அஜித் ரசிகர்கள்.. 'வலிமை' தயாரிப்பாளரை கண்டபடி திட்றாங்க!

சென்னை: விரைவில் ரிலீசாகவுள்ள Mee Raqsam டிரைலரை வெளியிட்ட வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரை, அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.

'வலிமை' என்ற டைட்டிலை தவிர இதுவரை அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் போனி கபூர் வெளியிடாத நிலையில், கிடைக்கும் போதெல்லாம் அஜித் ரசிகர்கள் அவரை வச்சு செய்கின்றனர்.

டிரைலரை வெளியிட்ட போனி கபூர்

டிரைலரை வெளியிட்ட போனி கபூர்

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் நண்பரும் பிரபல ஒளிப்பதிவாளருமான பாபா அஸ்மி இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள Mee Raqsam திரைப்படம் விரைவில் ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகிறது. பரதநாட்டியத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள அந்த படத்தின் டிரைலரை தற்போது போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கெஞ்சும் ரசிகர்கள்

கெஞ்சும் ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளிவராத நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர், ஒவ்வொரு முறையும் மற்ற படங்கள் குறித்த ட்வீட் போடும் போது, அஜித் ரசிகர்கள் கடுப்பாகி அவரை ட்ரோல் செய்தும், கண்டபடி திட்டியும், வரம்பு மீறி ஆபாசமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

வலிமை அப்டேட் கொடு குமாரு

வலிமை அப்டேட் கொடு குமாரு

"அடுத்த படத்தோட அப்டேட்ட தூக்கி தூரப்போட்டுட்டு உன் சொந்த படத்தோட அப்டேட்ட கொடு குமாரு" என பாலிவுட் பட டிரைலரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட நிலையில், கடுப்பான தல ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம்களை போட்டு வச்சு செய்து வருகின்ற்னார்.

தில்லாலங்கடி காமெடி

தில்லாலங்கடி காமெடி

ஜெயம் ரவியின் தில்லாலங்கடி படத்தில் சந்தானம் தான் யார் என்று தெரியாமல் மறதி நோயாளியாக நடித்திருப்பார். அந்த காமெடி டெம்பிளேட்டை வைத்து, நீங்க தான் வலிமை புரொட்யூசர், அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் நினைவூட்டுவதாக இந்த மீம் வைரலாகி கமெண்ட் பக்கத்தை கலகலப்பாக்கி இருக்கிறது.

நிலைமை இப்படி ஆகிடுச்சே

நிலைமை இப்படி ஆகிடுச்சே

சரி வலிமை படத்தோட அப்டேட்டை தான் கொடுக்க மாட்டீங்க, அட்லீஸ்ட் நீங்க ட்வீட் போடும் போது #Valimai என அந்த ஹாஷ்டேக்கையாவது போடுங்களேன் என சில ரசிகர்கள் எந்த அளவுக்கு கெஞ்ச முடியுமோ அந்த அளவுக்கு கெஞ்சுகின்றனர். வலிமை குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்கவே படக்குழு எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போ வருமோ எப்போ வருமோ

இப்போ வருமோ எப்போ வருமோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உழைப்பாளி படத்தின் பாடலை போட்டு, "இப்போ வருமோ.. எப்போ வருமோ" என வலிமை படத்தின் அப்டேட் எப்போது தான் வரும் என வேற லெவலில் இறங்கி ட்ரோல் செய்து போனி கபூரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள். இதற்கு நடுவே விஜய், அஜித் ரசிகர்களின் எல்லை மீறிய சண்டைகளும், கெட்ட வார்த்தையில் போனி கபூரை திட்டுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பாயாசம் காமெடி

பாயாசம் காமெடி

எதையாவது கேட்க வேண்டும் என்றால், உடனடியாக வந்து விழும் பாயாசம் காமெடி டெம்பிளேட்டையும் போட்டு, வலிமை அப்டேட் எங்க என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையாவது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என்பது தான் பலரது ஆதங்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X