இப்போ கூட விரைவில் தானா? போனி கபூர் ட்வீட்டால் காண்டான தல ரசிகர்கள்.. திட்டித் தீக்குறாங்க!
சென்னை: வலிமை அப்டேட்டுக்காக பிரதமர் மோடி வரை முறையிட்ட அஜித் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் போட்ட ட்வீட்டையும் தல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டாகவே வலிமை அப்டேட் பற்றி கேட்டால் விரைவில் வரும் என போனி கபூர் தெரிவித்து வந்த நிலையில், மீண்டும் அதே பல்லவியை அவர் பாடியுள்ளது அஜித் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
ஆனால், இந்த முறை வெகு விரைவாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

வலிமை ஃபர்ஸ்ட் லுக்
வணக்கம்.. வலிமை படம் மீது நீங்கள் காட்டும் அன்பை பார்த்து வியந்து போயுள்ளோம். கூடிய விரைவிலேயே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உங்களுக்காக வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் முதன் முறையாக தல ரசிகர்களை கூல் பண்ணும் விதமாக ஒரு ட்வீட் போட்டு கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

எப்போன்னு சொல்லல
ஆனால், இந்த ட்வீட்டிலும் விரைவில் என்று மட்டுமே குறிப்பிட்டு, எப்போ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் போகிறோம் என போனி கபூர் அறிவிக்காதது தல ரசிகர்களை மேலும் கடுப்பாகி உள்ளது. வழக்கம் போல அவரது ட்வீட்டுக்கு கீழே அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மொட்டையா சொன்னா எப்படி
வெறும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தேதியை கூட போனி கபூர் சொல்லாமல் விரைவில் எனக் கூறியதை பங்கமாக அஜித் ரசிகர்களே கலாய்த்து வருவது தான் வேடிக்கை. ரஜினி நடித்த சிவாஜி படத்தின் போட்டோவை போட்டு இப்படி மொட்டையா சொன்னா எப்படி என போனி கபூரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

டேட் சொல்லுங்க
"டியர் போனி கபூர் மாம்ஸ் வலிமை பர்ஸ்ட் லுக் Soon'ன்னு சொல்லிட்டீங்க. அப்படியே அந்த பர்ஸ்ட் லுக் டேட்டையும் சொல்லிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும்" என வெரைட்டி வெரைட்டியாக கமெண்ட் செய்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

தல இஸ் கம்மிங்
தல அஜித்தின் வலிமை படத்தில் இருந்து லீக்கான பைக் ஸ்டன்ட் காட்சியின் போட்டோவை பதிவிட்டு தல ரசிகர்கள் தல இஸ் கம்மிங் என #ValimaiUpdate ஹாஷ்டேக்கை மறுபக்கம் திருவிழாவாக தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என அஜித் உத்தரவு போட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அமர்க்களம் ஆரம்பம்!


Click it and Unblock the Notifications











