Don't Miss!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் படத்தை ட்ரோல் செய்தபோது எங்கே போனீர்கள்.. சாந்தனுவை வச்சு விளாசிய அஜித் ரசிகர்கள்!
சென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சாந்தனு, பீஸ்ட் படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், நடிகர் ஆரி பேசியதை ஷேர் செய்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக ப்ளூ சட்டை மாறனுக்கும் நடிகர் சாந்தனுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்யும் போது எங்கே போனீர்கள் என அஜித் ரசிகர்கள் சாந்தனுவை விளாசி வருகின்றனர்.
யாஷ் இப்படி இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை… சரண் சொன்ன தகவல் !

தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்து அசத்தி இருந்தார் நடிகர் சாந்தனு. மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிலும், மாஸ்டர் படத்தில் நடித்தது பற்றி பல விஷயங்களை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு எதிராக கிளம்பி உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார் நடிகர் சாந்தனு.

வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறனை திட்டும் விதமாக நடிகர் ஆரி பேசிய வீடியோவை சாந்தனு ஷேர் செய்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் பிட்டுப்படத்தில் நடித்த நடிகர் எல்லாம் பேசக் கூடாது என்பது போல ட்வீட் போட்டு புதிய சண்டையை ஆரம்பித்து வைத்தார்.

வலிமை வந்தப்போ கோமாவில் இருந்தீங்களா
சாந்தனுவின் கமெண்ட்டுக்கு கீழ் சில அஜித் ரசிகர்கள் வலிமை படம் வந்தப்போ வாயே திறக்கவில்லையே.. அப்போ என்ன கோமாவிலா இருந்தீங்க என கண்டபடி திட்டி சாந்தனுவுக்கு எதிரான கமெண்ட்டுகளை போட்டு அவரை வம்பிழுக்க அதற்கு மறுப்பும் தெரிவிக்கும் விதமாக நடிகர் சாந்தனுவும் பதில் அளித்துள்ளார்.

அஜித்தை பாடி ஷேமிங் பண்ணும்போது
பீஸ்ட் படத்துக்கு ஆதரவாக நடிகர் சாந்தனு குரல் கொடுத்துள்ள நிலையில், அஜித் படத்தை ட்ரோல் செய்யும் போது எங்கே போனீர்கள் என அஜித் ரசிகர்கள் சரமாரியாக நடிகர் சாந்தனுவிடம் கேள்விகளை எழுப்பி அவரை விளாசி வருகின்றனர். நடிகர் அஜித்தை பாடி ஷேமிங் பண்ணும் போதும் அதற்கு எதிராக பேசியுள்ளேன் என சாந்தனு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பாக்கியராஜ் பிரச்சனை
இதற்கு இடையே நடிகர் சாந்தனுவின் அப்பா பாக்கியராஜ் பேசிய அரசியல் ரீதியான கருத்துக்களுக்கு எதிராகவும் நடிகர் சாந்தனுவை ட்ரோல் செய்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அஜித் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். "இந்தி தெரியாது போடா" டிசர்ட்டை சாந்தனு மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த போட்டோக்களையும் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.
-
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?