ஷாலினி அஜித் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. ஏமாந்து ரீட்வீட் செய்து திட்டு வாங்கும் யாஷிகா ஆனந்த்!

சென்னை: நடிகர்கள் பெயரில் தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்தின் பெயரில் புதிதாக ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அதை நம்பி நடிகை யாஷிகா ஆனந்த் ரீட்வீட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ட்விட்டரில் ஷாலினி அஜித்தா

ட்விட்டரில் ஷாலினி அஜித்தா

நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி உள்ளார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றால் கூட மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாகத்தான் அஜித் அறிவிப்பார். இந்நிலையில், ஷாலினி பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு வலம் வரத் தொடங்கியுள்ளது.

ஏமாந்த யாஷிகா

ஏமாந்த யாஷிகா

திடீரென நான் தான் ஷாலினி ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகி உள்ளேன் என கணவர் அஜித்துடன் இருக்கும் பிரத்யேக புகைப்படத்துடன் ட்வீட் போட்ட நிலையில், அதை பார்த்து நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் ஏமாந்து போய் வெல்கம் மேம் என அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்ததும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமே ஏற்பட்டது.

ஃபேக் ஐடி

ஃபேக் ஐடி

ஆனால், நடிகை ஷாலினி ட்விட்டரில் எந்த கணக்கையும் தொடங்கவில்லை என்றும் இது ஃபேக் ஐடி என்று ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் அந்த ஐடியை ரிப்போர்ட் அடித்து வருகின்றனர். மேலும், இதுபோல பிரபலங்களின் பெயர்களில் விளையாடும் விஷமக்காரர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

யாஷிகாவுக்கும் திட்டு

யாஷிகாவுக்கும் திட்டு

ஒரு பிரபல நடிகையான நீங்கள் இதுபோன்ற ஃபேக் ஐடிக்களை எப்படி ஆதரிக்கலாம். ஒரு முறை கிராஸ் ஃவெரிஃபிகேஷன் கூடவா செய்ய முடியாது என யாஷிகாவையும் திட்டித் தீர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இதனால், யாஷிகா ஆனந்த் கடும் அப்செட் ஆகி உள்ளார். சில ரசிகர்கள் யாஷிகா ட்வீட் போட்ட நிலையில், அது நிஜ ஐடியா என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளனர்.

சுரேஷ் சந்திரா விளக்கம்

சுரேஷ் சந்திரா விளக்கம்

இந்நிலையில், நடிகை ஷாலினியின் பெயரில் உலாவும் ட்விட்டர் கணக்கு ஃபேக் ஐடி தான் என்றும் அவர் ட்விட்டரில் எந்தவொரு கணக்கையும் வைத்திருக்கவில்லை என சுரேஷ் சந்திரா உடனடியாக விளக்கத்தையும் தற்போது அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X