»   »  சிம்பு மீது கொலவெறியில் இருக்கும் தல ரசிகர்கள்!

சிம்பு மீது கொலவெறியில் இருக்கும் தல ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்தின் தீவிர ரசிகராக தன்னைக் காட்டிக்கொண்ட சிம்புவின் பேச்சில் சமீபகாலமாக திடீர் மாற்றம்.

தான் அஜித்துக்கு இனி ரசிகர் இல்லை என்று சொன்னதோடு விஜய்யையும் புகழ்ந்து தள்ளினார். இது அஜித் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது.

Ajith fans turn fury on Simbu

இந்த விவகாரத்தில் இதோடு நிற்காமல், அஜித் புரமோஷன்களுக்கு வருவதில்லை என்று நேரடியாகவே அஜித்தை தாக்கியிருக்கிறார் சிம்பு. சமீபத்திய பேட்டி ஒன்றில்... ஷூட்டிங்குக்கு தாமதமாக வருவது பற்றிய கேள்விக்கு "ஏன் என்னை மட்டும் வந்து கேக்கறீங்க... அஜித் தான் நடிக்கிற படங்களோட புரமோஷன்களுக்கே வர்றதில்லை. அவரைப் போய் கேளுங்க..'' என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.

அஜித் புரமோஷன்களுக்கு வராமல் இருப்பதும், இவர் படப்பிடிப்புக்கே வராமல் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவதும் ஒன்றா...? என்று அஜித்தின் ரசிகர்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.

English summary
Ajith's fans have turned fury on Simbu due to his negative comments on their Thala.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil