இந்த லுக்கிற்காக அடுத்த தீபாவளி வரைக்கும் வெயிட் பண்ணலாம்.. கடைசி வரை ரிலீஸ் தேதியை சொல்லலையே பாஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், விடாமுயற்சி படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என அறிவித்து விட்டனர். அந்த படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி வரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்பது போன்ற அறிவிப்பாகவே லைகாவின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரமின் தங்கலான் ஆகஸ்ட் 15ம் தேதி வருகிறது. சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வருகிறது என வரிசையாக பல படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை ஏன் சொல்லவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியன் 2 பார்த்த வேலை: லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வெளியிட்ட லைகா திரைப்படம் வெளியாகி லைகாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்த படத்தை வெளியிடுவதில் ரொம்பவே கவனத்துடன் செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் மீது ஃபோகஸ் என்றும் அதன் பின்னர் தான் விடாமுயற்சி படம் பற்றிய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்வீட் சர்ப்ரைஸாக செம போஸ்டர் ஒன்று வெளியானது.

ஆணழகன் அஜித்: வலிமை முதல் துணிவு படம் வரை அஜித்தின் தோற்றம் குறித்து ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் கூட கலாய்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ரகசியமாக மகிழ் திருமேனி பாதுகாத்து வைத்திருந்த விண்டேஜ் அஜித் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை எப்படி சாத்தியமாக்கினார் என்றும் ஆணழகன் அஜித் இஸ் பேக் என்றும் ரசிகர்கள் அந்த போஸ்டரை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீன் வந்தாலே போதும், அதற்கு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வெயிட் பண்ணாலும் படம் ஒர்த்தா வரும் என அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனி மீது பெரிய நம்பிக்கையையே வைத்து விட்டனர்.

ரிலீஸ் தேதி எப்போ?: ஆனால், சில அஜித் ரசிகர்கள் சீக்கிரமே அஜித்தை இந்த லுக்கில் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்கிற வெறியில் ரிலீஸ் தேதியை லைகா ஏன் இன்னமும் அறிவிக்காமல் நேரத்தை வீணடித்து வருகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியன் 2 படத்துக்கான புரமோஷன் வீடியோக்களில் எல்லாம் வந்து லைகாவை கண்டபடி அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
டபுள் ட்ரீட்: கூடிய சீக்கிரமே அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் நிறைவடைந்து அடுத்தடுத்து அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது. மனைவி ஷாலினி அஜித் சிகிச்சையில் இருந்தாலும், தொடர்ந்து கமிட்டான படங்களை முடிக்க அஜித் தீவிரமாக நடித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











