பேட்ட படமே ரிலீஸானாலும் விஸ்வாசம் ட்ரெய்லர் வராது போல: கொலவெறியில் தல ரசிகாஸ்
Recommended Video

சென்னை: பேட்ட ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித் ரசிகர்கள் இயக்குனர் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் மீது செம கடுப்பில் உள்ளனர்.
ரஜினியின் பேட்ட படத்தை போன்றே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேட்ட படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸோ தினமும் அப்டேட் கொடுக்கிறது.
விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸிடம் அஜித் ரசிகர்கள் கெஞ்சினாலும் அப்டேட் கிடைப்பது இல்லை.

பேட்ட
பேட்ட படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டது சன் பிக்சர்ஸ். ட்ரெய்லர் வெளியான 40 நிமிடத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துவிட்டனர். ட்விட்டர் பக்கம் போனாலே பேட்ட ட்ரெய்லர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தான் பேச்சாக உள்ளது.
சிவா
விஸ்வாசம் படத்தின் டீஸர் எப்பொழுது வரும் என்று தெரியாமல் அஜித் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் பேட்ட ட்ரெய்லரை பார்த்த அவர்கள் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் மீது மேலும் கடுப்பாகியுள்ளனர்.
அமைதி
தல ரசிகர்கள் விஸ்வாசம் டீஸர் அப்டேட் கேட்டு இப்படித் தான் நொந்து நூடுல்ஸ் ஆகின்றனர்.
தயாரிப்பாளர்
டீஸர் வெளியிடாமல் அமைதி காக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் மீது அஜித் ரசிகர்கள் செம காண்டில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











