இன்னைக்காவது வலிமை பட அப்டேட் கிடைக்குமா? காத்திருக்கும் தல ரசிகர்கள்.. மெளனம் காக்கும் படக்குழு?

சென்னை: மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் அன்றே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராவது வருமா? என எதிர்பார்க்கத் தொடங்கிய அஜித் ரசிகர்கள், இயக்குநர் எச். வினோத் பிறந்தநாளன்றும் எதிர்பார்த்துக் கொண்டே காத்திருக்கின்றனர்.

Recommended Video

Ajith Strong Decision | Valimai team Plan, Ajith, Boney Kapoor

பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு வக்கீல் சாப் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் எல்லாம் விட்டீங்க, இன்னைக்கு ஒன்றும் கிடையாதா? என தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்

இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்

சதுரங்க வேட்டை படம் மூலமாக தான் ஒரு சிறந்த இயக்குநர் மற்றும் கதாசிரியர் என்பதை ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் நிரூபித்துக் காட்டிய இயக்குநர் எச். வினோத்தின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. #HVinoth என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு தல ரசிகர்கள் இயக்குநர் வினோத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஹாட்ரிக் ஹிட்

ஹாட்ரிக் ஹிட்

பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜை நடிகராக மாற்றி சதுரங்க வேட்டை படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த எச். வினோத், அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று எனும் செம சூப்பரான காப் த்ரில்லர் ஸ்டோரியை படமாக்கி இருந்தார். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டிக்கும் விதமாக இருந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும், தீபாவளிக்கு தியேட்டர்களில் வலிமை படத்துடன் பண்டிகையை கொண்டாடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் அத்தனை கனவுகளையும் சிதைத்து விட்டது. இயக்குநர் எச். வினோத் பிறந்தநாளான இன்றாவது ஒரு அப்டேட் கிடைக்குமா? என காலை முதலே சமூக வலைதளங்களில் காத்துக் கிடக்கின்றனர்.

தயாரிப்பு தரப்பு மீது கோபம்

தயாரிப்பு தரப்பு மீது கோபம்

தல அஜித்தின் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வலிமை பட அப்டேட்களை சரியான நேரத்தில் வெளியிட மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டை பல அஜித் ரசிகர்கள் கூறி வருவது மட்டுமின்றி அவரை கண்டபடி திட்டியும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் எச். வினோத் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து கூட சொல்லவில்லை என்றும், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையாவது விடலாம் என ரொம்பவே ஃபீல் செய்கின்றனர்.

சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ்

சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ்

கதைக்களம் மற்றும் படத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள இயக்குநர் எச். வினோத், நாம அதிகமா பேசக் கூடாது.. நம்ம படம் தான் பேசணும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். நிச்சயம் எப்போ வந்தாலும் எப்படி வந்தாலும் வலிமை படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X