ப்ளீஸ் போனி சார்.. அஜித்தின் அடுத்தப்படம் அப்டேட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்! #thala60

Recommended Video

Super Star Vijay : விஜய் அம்மா ஷோபா எழுதிய கவிதை | Today's Tea Vadai Pechu

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் அதனை தல60 என ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்தது இந்த படம்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தான் தயாரிக்கிறார்.

நாள்தோறும் அறிவிப்பு

நாள்தோறும் அறிவிப்பு

நேர்கொண்ட பார்வையை இயக்கிய ஹெச் வினோத்தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்து நாள்தோறும் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகி வருகிறது.

ட்ரென்ட்

ட்ரென்ட்

ஆனால் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ், டீசர் இதுபோன்ற சமயங்களில்தான் படத்தின் பெயர் வெளியிடுவது இப்போது ட்ரென்ட்டாகி வருகிறது.

தல 60

தல 60

அதுவரை படத்தின் ஹீரோவுக்கு இது எத்தனையாவது படம் என்பதை வைத்தும் ஹீரோவின் செல்லப்பெயரை வைத்துமே படத்தை குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தப்படத்தை தல60 என்று குறிப்பிடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

அஜித்தின் 60வது படம்

அஜித்தின் 60வது படம்

இந்நிலையில் அஜித்தின் 60வது படத்தின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதுதொடர்பான போட்டோக்களும் வைரலானது.

ட்ரென்ட்டிங்

ட்ரென்ட்டிங்

இந்நிலையில் புதிய படம் குறித்த மேலும் சில அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டிவிட்டரில் #Thala60 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டர் ட்ரெட்டிங்கில் டாப்பில் உள்ளது.

ப்ளீஸ் போனி சார்

எங்களுக்கு தல60 அப்டேட் வேண்டும்... ப்ளீஸ் போனி சார் சில அப்டேட்டுகளை கொடுங்கள்.. என்று கேட்கிறார் இந்த ரசிகர்.

காத்திருக்கிறோம்

தல 60க்கான ஹைப் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். போனி சார் அதனை விரைவில் செய்வார் என நம்புகிறோம். புரக்டெக்ஷன் தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X