Ajith: அஜித் பட தயாரிப்பாளருக்கு இப்படியொரு நோயா... விசயம் அவருக்கு தெரியுமா..?

சென்னை: ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் போன்ற திரைப்படங்கள் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன.

இந்தப் படங்கள் உட்பட மொத்தம் 9 படங்களை அஜித்துக்காக தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

அஜித் - நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.

இந்நிலையில், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Ajith film producer Nic Arts Chakravarthy is reported to have cancer

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி
அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தி. நிக் ஆர்ட்ஸ் என்ற பேனரில் எஸ்.எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் மட்டும் மொத்தம் 9 படங்களில் நடித்துள்ளார் அஜித். ராசி படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு படங்கள் வரை தொடர்ந்தது.

ஒருகாலத்தில் அஜித்தின் பட அறிவிப்பு என்றாலே, அது நிக் ஆர்ட்ஸ் பேனர் தான் என்ற நிலை இருந்தது. தொடர்ச்சியாக அஜித் - நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி கூட்டணியில் படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. கடைசியாக சிம்பு நடித்த வாலு படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அதன் பின்னர் பட தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் போலீஸாக நடித்திருந்தார் எஸ்.எஸ் சக்கரவர்த்தி.

இந்நிலையில், தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தி கேன்சாரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தற்போது கேன்சர் உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குறித்து உறுதியான செய்திகள் வெளியாகவில்லை என்றாலும், கோலிவுட்டில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Ajith film producer Nic Arts Chakravarthy is reported to have cancer

பொதுவாகவே தனக்கு நெருக்கமானவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து வருபவர் அஜித். அதுவும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அஜித்துக்கு காட்ஃபாதர் மாதிரி பக்கபலமாக இருந்தவர். அஜித்துக்காக 9 படங்களை தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது தயாரிப்பாளருக்கு கேன்சர் என தெரிந்தால் அஜித் கண்டிப்பாக உதவி செய்யாமல் இருக்க மாட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேநேரம், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் உடல் நலம் குறித்து உண்மையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்திற்கு மிக நெருக்கமான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X