வாரே வா...தல பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கையில் எடுத்துருக்காரா...சபாஷ்!
Recommended Video
சென்னை: தல அஜீத் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு முழுவதும் முடியவில்லை.
நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பே நேர்மை நாணயம்னு கதை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் போலன்னு ரசிகர்களை எண்ண வைத்தது.

அதுக்கு ஏத்த மாதிரியான தகவல்கள் இப்பபோ கிடைச்சு இருக்கு.
பொள்ளாச்சி கும்பலின் பாலியல் வன்முறை அச்சத்தில் இருந்து இன்று வரை பெண்கள் விடுபடவில்லை. எந்த ஆணையும் பார்த்து பேச கல்லூரி பெண்கள் பயப்படறாங்க.
அது மட்டுமா, பெத்தவங்க கூட வயசு பெண்களை வெளியில் அனுப்ப பயந்து, படிப்பை பாதியில் நிறுத்தி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துகிட்டு இருக்காங்க.
இதுக்கு எல்லாம் நியாயமே கிடைக்காது என்கிற நிலைதான் நீடித்து வருகிறது. இந்த சமயத்துலதான் ஆறுதல் அளிப்பது போல பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மைய கதையாக கொண்ட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத் நடிக்கிறாராம்.
குடும்ப சென்டிமென்ட்ஸ்,ஆக்ஷன் என்று இருந்த தல பார்வை இப்போ விலகி சமூகத்தின் அவலங்கள் பக்கமும் திரும்பி இருக்கிறது போலும்...
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே


Click it and Unblock the Notifications











