அஜீத்-கௌதம் மேனன் படத்தின் தலைப்பு 'ஆயிரம் தோட்டாக்கள்'?
சென்னை: அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அஜீத் குமார், கௌதம் மேனன் இணைந்துள்ள படத்தின் பூஜை கடந்த 9ம் தேதி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திற்கு சொந்தமான சாய்பாபா கோவிலில் நடைபெற்றது.
இதையடுத்து படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

படப்பிடிப்பு
அஜீத்-கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 11ம் தேதி துவங்கியுள்ளது. படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள விஜிபி கோல்டன் பீச் அருகே நடந்ததாம்.

கௌதம் மேனன்
இரண்டு நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இனிமையான அனுபவம். யூனிட்டில் உள்ள அனைவரையும் குடும்பத்தார் போன்று கருதும் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றுகிறேன் என்று அஜீத் பற்றி கௌதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர்
படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்காக கடுமையாக உழைக்கிறோம். திங்கட்கிழமையில் இருந்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆயிரம் தோட்டாக்கள்
அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று பெயர் வைக்கப்படும் என கூறப்படுகிறது. படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஒரே ஷெட்யூல்
படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடித்து இந்த ஆண்டே அஜீத் ரசிகர்களுக்கு விருந்து படைக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











