சும்மா ஜில்லுனு இருக்கார்ல.. ரசிகர்களுடன் தல அஜித்.. மீண்டும் வைரலாகும் புதிய போட்டோஸ்!
சென்னை: நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.

காயம் அடைந்தார்
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டது.

காசி விஸ்வநாதர்
வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை, டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்கப்பட இருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், பின்னர் வரலாற்றுப் புகழ் மிக்க நகரமான சாரநாத்துக்கும் சென்றுள்ளார்.

தெருக் கடை
வாரணாசியில் அவர் தெருக் கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க்கை கழற்றிய பிறகு அவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபம் கேசரி என்பவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சிக்கிம் வரை
அப்போது அஜித்தை சந்தித்தது பற்றி அவர் பேட்டி அளித்திருந்தார். நடிகர் அஜித், சிக்கிம் வரை பைக்கிலேயே சென்றுவிட்டு சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் ரோட் ட்ரிப்பை முடித்திருந்தார். இந்த ட்ரிப்பில் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவரும் அஜித்துடன் சென்றிருந்தார்.

புதிய போட்டோஸ்
அவர் அஜித் பற்றி பாராட்டி சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது ரசிகர்களுடன் எடுத்துள்ள புதிய போட்டோஸ் வேகமாக பரவி வருகின்றன. சில ரசிகர்கள், தல சும்மா ஜில்லுனு இருக்கார்ல என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











