ஏ.எம். ரத்னத்தின் சாய்பாபா கோவிலில் பூஜையுடன் அஜீத் படம் துவக்கம்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.
அஜீத் குமார் கௌதம் மேனன் இணையும் படம் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட வேலைகள் துவங்கப்பட்டது.
இப்போதைக்கு 'தல 55' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் துவக்க விழா பற்றி பார்ப்போம்.

சென்னை
படத்தின் பூஜை சென்னை வலசரவாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திற்கு சொந்தமான சாய்பாபா கோவிலில் இன்று காலை நடந்தது.

கௌதம்
பூஜையில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மற்றும் படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகியோர் சாய்பாபாவிடம் ஆசி பெற்றனர்.

ஒரே ஷெட்யூல்
இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படம் மார்ச் மாதமே துவங்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போனது. இதனால் படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.

அனுஷ்கா
'தல 55' படத்தில் இரண்டு நாயகிகள். ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











