த்ரிஷா, அனுஷ்காவுக்காக கெட்டப்பை மாற்றிய அஜீத்
சென்னை: தல 55 படத்தில் அஜீத் த்ரிஷாவுக்காக ஒரு கெட்டப்பும், அனுஷ்காவுக்காக ஒரு கெட்டப்பும் போடுகிறாராம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் தல 55. படத்திற்கு இன்னும் பெயர் வைக்காததால் ரசிகர்கள் படத்தை தல 55 என்கிறார்கள். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

த்ரிஷா
த்ரிஷாவின் கணவர் கதாபாத்திரத்தில் வரும் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம். படத்தில் அஜீத், த்ரிஷா தம்பதிக்கு 5 வயது மகளும் உண்டு.

அனுஷ்கா
அனுஷ்காவின் ஜோடியாக வரும் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாங்க நரைத்த தலையுடன் வருகிறாராம்.

4வது முறை
த்ரிஷா அஜீத்துடன் சேர்ந்து ஜி, கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தலைப்பு
படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல்வேறு தலைப்புகளை கையில் வைத்துக் கொண்டு அதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்ய கௌதம் முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











