நைட்ஷோ பார்க்க த்ரிஷாவுடன் தியேட்டருக்கு சென்ற அஜீத்
சென்னை: அஜீத், த்ரிஷாவுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார்.
அஜீத் எதற்கு ஷாலினியை விட்டுவிட்டு த்ரிஷாவுடன் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா. இது நிஜத்தில் இல்லை படத்திற்காக. கௌதம் மேனன் படத்தில் அஜீத்தும், த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் இருவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் காட்சி உள்ளது.

தியேட்டர்
நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்டுகளை அமர வைத்து அஜீத், த்ரிஷா படம் பார்க்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

இரவு
அஜீத், த்ரிஷா பகல் நேரத்தில் தியேட்டருக்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் அந்த காட்சியை இரவு நேரத்தில் படமாக்கியுள்ளனர்.

டான் மெக்கார்தர்
இதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா என்று கேட்டால் இல்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் தான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜென்டில்மேன்
அஜீத் குறித்து டான் ட்விட்டரில் கூறுகையில், அஜீத் தல ஒரு ஜென்டில்மேன். அவருடன் பணிபுரிவது இன்பம். மரியாதை மற்றும் புகழுக்கு உரியவர் என்று தெரிவித்துள்ளார்.

ட்வீட்
அஜீத் என்பதால் சும்மா ரீல் சுத்தாதீங்க என்று தானே கூறுகிறீ்ர்கள். இது ஒன்றும் நாங்கள் கூறியது அல்ல என்பதன் சாட்சியாகவே டானின் ட்விட்டர் கருத்தை எம்பெட் செய்துள்ளோம் பாஸ். இது தான் அந்த ட்வீட்.


Click it and Unblock the Notifications











