என்னது ஆதி -நிக்கி கல்ராணி கல்யாணத்துல அஜித் கலந்துக்குறாரா... ஆதி சொன்ன தகவலை பாருங்க!

சென்னை : நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களது காதல் அரசல் புரசலாக வெளியில் கசிந்த போதிலும் இருவரும் அதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

Special Couple..Special Wishes...

நடிகர் ஆதி

நடிகர் ஆதி

நடிகர் ஆதி சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவரது தேர்ந்தெடுத்த கதைத் தேர்வு இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது. இவருக்கு நடிப்பு மட்டுமின்றி சிறப்பாக காமெடியும் செய்ய வருகிறது. இத்தகைய நடிப்பினை இவர் கொடுத்து வருகிறார். மற்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்து வருகிறார்.

பார்ட்னர் படத்தில் ஆதி

பார்ட்னர் படத்தில் ஆதி

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது தமிழில் பார்ட்னர் என்ற படத்தில் ஹன்சிகாவுடனும் லிங்குசாமி இயக்கும் வாரியர் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். முன்னதாக இவரது நடிப்பில் மரகத நாணயம் உள்ளிட்ட சிறப்பான படங்கள் வெளியாகின.

நிக்கி கல்ராணி -ஆதி காதல்

நிக்கி கல்ராணி -ஆதி காதல்

இதனிடையே பிரபல நடிகை நிக்கி கல்ராணியுடன் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே காதல் என்ற பேச்சு அடிபட்டது. இருவரும் இதுகுறித்து மௌனம் சாதித்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனக்கு காதல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம்

மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம்

இருவரும் மரகத நாணயம் படத்தில் இணைந்து நடித்தபோதே காதல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் வீடியோவையும் புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் வரும் 18ம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.

பிரபலங்களுக்கு அழைப்பு

பிரபலங்களுக்கு அழைப்பு

இதற்காக திரைத்துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் ஆதி. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இருவரும் இந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

திருமணத்தில் அஜித் பங்கேற்பு?

திருமணத்தில் அஜித் பங்கேற்பு?

இந்நிலையில் அஜித் இவரது திருமணத்தில் கலந்து கொள்வாரா என்பது குறித்து இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். அஜித்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளதாகவும் அவர் கலந்து கொள்வாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமணம்

சென்னையில் திருமணம்

மிருகம், ஈரம், யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் ஆதி ஆந்திராவை சேர்ந்தவர். என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனவே சென்னையில் இவரது திருமணம் நடைபெறவுள்ளது. இதனிடையே நிக்கி கல்ராணியும் சென்னையில் செட்டில் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X