தெறிக்க விடும் அஜித்தின் மாஸ் என்ட்ரி... குட் பேட் அக்லி டீசர்... ரசிகர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் சற்று முன் வெளியானது. ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தல பொங்கலாக மாறியுள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். டீசர் வெளியாகும் முன்பே பரபரப்பாய் இருந்த ரசிகர்களுக்கு மெகா விருந்தை படையலாக அளித்துள்ளார் அஜித்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 3 கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது, படத்தின் புரோமோசன் வேலைகளும் பரபரப்புடன் நடந்துவருகிறது. சமீபத்தில் இப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

good bad ugly movie teaser GBU teaser ajith

மேலும் ஒரு ட்விஸ்ட்: இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இப்படத்தின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக money Heist தொடர் போன்று இப்படத்தின் செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமாதிரியான தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

good bad ugly movie teaser GBU teaser ajith

வெடி போடு மாமே:1 நிமிடம் 34 நொடிகள் இடம்பெறும் டீசரில் அஜித்தின் கெட்டப்புகள் மாஸாக தெறிக்க விடுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ரசிகர் என நிரூபித்துவிட்டார் என நெட்டிசன்கள் கமாண்ட்களை தெறிக்க விடுகின்றனர். விடாமுயற்சி தந்த ஏமாற்றம் இதில் இல்லை என கூறத் தொடங்கியுள்ளனர். அஜித்தின் சரவெடியாக சம்பவம் செய்துள்ளார் என கூறி வருகின்றனர். மேலும், டீசர் வெளியான நொடி முதல் GBU டிரெண்டிங்கில் உள்ளது.

good bad ugly movie teaser GBU teaser ajith

திரையரங்கில் கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டும் டீசர் வெளியிடப்பட்டது. சென்னையில், கமலா சினிமாஸ், ரோகிணி தியேட்டர், வெற்றி தியேட்டர்களிலும், திருச்சியில் லா சினிமாஸிலும் டீசர் திரையிடப்பட்டது. வேலூரில் அலங்கார் சினிமாஸிலும், திருவண்ணாமலையில் உள்ள சக்தி சினிமாஸிலும் கும்பகோணத்தில் உள்ள வாசு தியேட்டரிலும் டீசர் திரையிடப்பட்டது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தியேட்டருக்குள் கால் வைக்க கூட இடம் இல்லை என கதறுகின்றனர். அஜித்தை காண சேர்ந்த கூட்டம் என ஹார்ட்டின் விடுகின்றனர். சொன்னதை போல் டீசரும் மாஸாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டீசரை பார்க்க ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட் புக் செய்தது குறிப்பிடத்தக்கது.

good bad ugly movie teaser GBU teaser ajith

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X