Vidaamuyarchi - விடாமுயற்சி.. அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி)மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்துக்கு அஜித்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹெச்.வினோத் - அஜித் - போனிகபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அதே கூட்டணியில் துணிவு படம் உருவானது. இதில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.பெரும் எதிர்பார்ப்போடு வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கியது துணிவு.

Ajith Got 105 Crores Salary For Vidaamuyarchi

வாரிசை வென்ற துணிவு: பல வருடங்கள் கழித்து அஜித்தும் விஜய்யும் ஒரே நாளில் தங்களது படங்களை களமிறக்கியதால் யார் வெல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்தப் போட்டியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் துணிவு படமே வென்றிருப்பதாக திரையுலகில் பேச்சு எழுந்தது. துணிவு படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்ததாகவும் கூறப்பட்டது.

ஏகே 62வில் கமிட்டான அஜித்: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் எனவும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் அந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விக்னேஷ் சிவனை நம்பவைத்து அஜித் ஏமாற்றிவிட்டார் என ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே பேசினர்.

Ajith Got 105 Crores Salary For Vidaamuyarchi

ஏகே 62வை இயக்கும் மகிழ் திருமேனி இதனையடுத்து அஜித் 62ஆவது படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்ற கேள்வியே அனைவரிடமும் எழுந்தது. தொடர்ந்து ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பார் என்றும், நீர்வ ஷா ஒளிப்பதிவு செய்வார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பல மாதங்கள் ஆகியும் படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி: அஜித் இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி ஏகே 62 படத்தின் பெயர் நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்தின் குணத்தை படத்தின் பெயர் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

Ajith Got 105 Crores Salary For Vidaamuyarchi

விடாமுயற்சிக்கு அஜித்தின் சம்பளம்: இந்நிலையில் விடாமுயற்சி படத்துக்காக அஜித்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதற்கு முன்னதாக போனி கபூர் தயாரிப்பில் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. துணிவு கொடுத்த வெற்றியால்தான் விடாமுயற்சிக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் அஜித் வந்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X