ஷாலினியின் அந்த செயலால் அப்செட்டான அஜித்.. என்ன நடந்தது.. முழுமையாக சொல்லும் பிருத்விராஜ்!

சென்னை: லாக்டவுனுக்கு முன்னதாக ஹோட்டல் ஒன்றில், ஷாலினி செய்த செயலால் நடிகர் அஜித் அப்செட்டானது குறித்து நடிகர் பிருத்விராஜ் விளக்கி உள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டு குடும்ப வாழ்க்கையில், கோலிவுட்டின் சிறந்த தம்பதிகளாக அஜித் மற்றும் ஷாலினி திகழ்ந்து வருகின்றனர்.

அந்த சம்பவத்தில், அஜித் அப்படி அப்செட் ஆனது குறித்த அறிந்த நடிகர் பிருத்விராஜ், அஜித்தின் பெரிய மனசை அறிந்து ஆச்சர்யப்பட்டுள்ளார்.

ஒரே தல

ஒரே தல

'தல' என்ற டைட்டிலை கிரிக்கெட் ஜாம்பவான் தோனிக்கு கூட விட்டுத் தரமாட்டோம் என அஜித் ரசிகர்கள், தோனியின் பிறந்தநாளான நேற்று ஹாஷ்டேக் உருவாக்கி சண்டை போட்டு டிரெண்ட் செய்தனர். ஆனால், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பெருந்தன்மை, மற்றவரை மதிப்பது உள்ளிட்ட அனைத்து நல்ல குணங்களும் இருக்கும் ஒரே தல நடிகர் அஜித் தான் என்று சொல்வது மிகையாகாது.

ஷாலினி செயல்

ஷாலினி செயல்

லாக்டவுனுக்கு முன்னதாக நடிகை ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா இருவரும், சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது, அதே உணவகத்துக்கு வந்த நடிகர் பிருத்விராஜ், ஷாலினியை அடையாளம் கண்டும் அவர் அருகே சென்று சந்தித்து பேச முடியாமல் தயங்கி உள்ளார்.

போன் செய்த ஷாலினி

போன் செய்த ஷாலினி

இது போன்ற சம்பவம் ஒரு முறை மட்டுமல்ல, தொடர்ந்து மூன்று முறை நடந்துள்ளது. மூன்றாவது முறை, அந்த ஹோட்டல் மேனேஜர் பிருத்விராஜ் அருகே வந்து, ஷாலினி மேடத்துக்கு உங்க நம்பரை ஷேர் செய்யவா என கேட்க, பிருத்விராஜும் அதற்கு சம்மதித்துள்ளார், அடுத்த நொடியே, ஷாலினி அவருக்கு போன் செய்து, அவரை நேரில் வந்து சந்தித்து பேசாததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அப்செட்டான அஜித்

அப்செட்டான அஜித்

இந்த சம்பவம் குறித்து, நடிகர் அஜித்துக்கு ஷாலினி விளக்கிய நிலையில், அஜித் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார். அவர் ஒரு சீனியர் நடிகர், எனது நண்பர், ஸ்கூல் சீனியர், அவரை நேரில் சந்தித்து நீங்க பேசியிருக்க வேண்டும் என அஜித் கூறியதாக ஷாலினி, பிருத்விராஜிடம் பகிர்ந்த விசயத்தை கேட்டு, அதிர்ந்தே போயுள்ளார் பிருத்விராஜ்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

பப்லு என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் பிருத்விராஜ், தல அஜித்துடன் அவள் வருவாளா படத்தில் சிம்ரனின் முதல் கணவராக இணைந்து நடித்திருப்பார். கடந்த ஆண்டு அஜித் மற்றும் சூர்யா குறித்து, பிருத்விராஜ் தவறாக சொன்னதாக ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஜித்தின் எளிமை மற்றும் மற்றவர்களை மதிக்கும் பண்பு குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X