அஜித் -ஹெச் வினோத்தின் முதல் கலக்கல் காம்பினேஷன்.. 3 ஆண்டுகளை கடந்த நேர்கொண்ட பார்வை!

சென்னை :நடிகர் அஜித் மற்றும் ஹெச் வினோத் காம்பினேஷனில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

இந்தப் படம் இவர்களின் கூட்டணியில் வெளியான முதல் படம். இதையடுத்து வலிமை தற்போது ஏகே 61 என இவர்கள் காம்பினேஷன் தொடர்ந்து வருகிறது.

தற்போது பூனாவில் ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படம்

நடிகர் அஜித்குமார் மற்றும் ஹெச் வினோத் காம்பினேஷனில் உருவாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த படம் நேர்கொண்ட பார்வை. இன்றைய சூழலில் சமூகத்திற்கு தேவையான படம் என்ற விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் என்ற படத்தின் ரீமேக்காக உருவானது நேர்கொண்ட பார்வை.

நோ என்றால் நோ தான்

நோ என்றால் நோ தான்

நோ என்ற ஒற்றை வார்த்தையை கதைக்களமாக கொண்டு வெளியானது இந்தப் படம். ஒரு பெண் தன்னுடைய விருப்பத்தின்பேரில் உறவு கொண்டால் அது ஏற்கத்தக்கது. அதுவே அவரது விருப்பமில்லாமல் அவரை தொட முயற்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு புதிது.

பாலியல் அத்துமீறல்

பாலியல் அத்துமீறல்

ஷ்ரத்தா, அபிராமி மற்றும் ஆண்ட்ரியா என மூன்று தோழிகள் ஒரு பார்ட்டிக்கு போகும்போது எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறலை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் தொடர்ந்து அந்த இளைஞரின் அரசியல் பின்புலத்தால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதிலிருந்து சட்டப்பூர்வமாக அவர்கள் வெளியில் வர வழக்கறிஞராக அஜித்தின் உதவியும் என படம் நகரும்.

விருப்பத்துடன்கூடிய உறவு

விருப்பத்துடன்கூடிய உறவு

அந்த வகையில், ஷ்ரத்தா உள்ளிட்டவர்கள் மீது நமக்கு அனுதாபம் ஏற்படுவதை விட, அவர்களுக்கு எதிரான மனநிலையே ஏற்படுகிறது. காரணம் அவர்கள் மூவரும் திருமணத்திற்கு முன்னதாகவே பாலியல் உறவை மேற்கொள்வதுதான். தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் விருப்பத்துடன் உறவு கொள்வது தங்களது உரிமை என்பதாக கதை நகரும்.

சிறப்பான கதைக்களம்

சிறப்பான கதைக்களம்

சிக்கலான இந்தக் கதையை அஜித்துடனான தன்னுடைய முதல் படைப்பிலேயே கையில் எடுத்துக் கொண்டு சிறப்பான கதையும் அதை வெளிப்படுத்திய வகையில் இந்தப் படத்திற்காக ஹெச் வினோத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. வசனங்களும் அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்தன.

ஸ்பெஷலான யுவன் இசை

ஸ்பெஷலான யுவன் இசை

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அஜித் என்றாலே ஸ்பெஷலான இசை யுவனிடம் இருந்து கிடைக்கும். அந்த வகையில் படத்தில் அகலாதே பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் சண்டைக்காட்சிகளில் யுவனின் இசை வேற லெவல் ரகமாக இருந்தது.

3வது ஆண்டுக் கொண்டாட்டம்

3வது ஆண்டுக் கொண்டாட்டம்

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 3 ஆண்டுகளை கடந்துள்ளதை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019 ஆகஸ்ட் 8ம் தேதிதான் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. விருப்பமில்லாத பெண்கள் நோ சொல்லிய பிறகு அவர்களை தொடுவது சட்டப்படி குற்றம் என்பதை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது ஆச்சர்யமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X