Ajith: நீங்க பொறுமையா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுங்க.. நான் கிளம்புறேன்.. உலக சுற்றுலா செல்கிறாரா அஜித்?
சென்னை: ஏகே 62 படத்தை முடித்து விட்டு உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்லும் தனது ஆசையை நிறைவேற்ற நினைத்திருந்தார் நடிகர் அஜித்.
ஆனால், இயக்குநர் விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டது. அடுத்ததாக இயக்குநர்களே கிடைக்காத நிலையில், மகிழ் திருமேனி சிக்கியது.
மகிழ் திருமேனியின் திரைக்கதையில் ஏகப்பட்ட கரெக்ஷன் என ஏப்ரல் மாதமே முடியும் நிலையிலும் இன்னமும் ஏகே 62 எப்போ ஆரம்பம் ஆகும் என்பதே தெரியவில்லை.

முதல் கோணல் முற்றிலும் கோணல்: லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் அஜித் திடீரென இயக்குநரை நீக்கி விட்ட நிலையில், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல தொடர்ந்து அந்த படம் துவங்குவதற்கே பல கட்ட சிக்கல்கள் எழுந்து வருகின்றன.
நடிகர் அஜித்தும் இந்த படத்தை முடித்து விட்டு நிம்மதியாக தனது பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைத்து இயக்குநருக்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.
சொதப்புகிறாரா மகிழ் திருமேனி: இயக்குநர் மகிழ் திருமேனிக்கு திடீரென அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த பெரிய வாய்ப்பை நழுவ விட்டு விடக் கூடாது என்பதற்காக கதையை செம ஷார்ப்பாக உருவாக்கி வருகிறார்.
மேலும், நடிகர்கள் தேர்வு, லொகேஷன் தேர்வு உள்ளிட்ட பணிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்கின்றனர். ஆனால், நடிகர் அஜித் மகிழ் திருமேனியின் திரைக்கதையில் சில திருத்தங்களை சொல்லி வருவதால் தான் தாமதம் ஆகிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டூர் கிளம்ப திடீர் முடிவு: தனக்கு பிடித்த மாதிரி பக்காவான ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் மகிழ் திருமேனி ரெடி செய்ய தாமதம் செய்து வருவதாக அஜித் தரப்பு வருத்தத்தில் இருப்பதாகவும், நேரத்தை சும்மா இருந்து வீணடிக்க வேண்டாம் அதற்குள் தனது உலக சுற்றுலா பயணத்தின் ஒரு அங்கத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்கிற முடிவுக்கே அஜித் வந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 அறிவிப்பு வெளியாவதுடன் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென இப்படியொரு அதிர்ச்சி தகவல்கள் சினிமா வட்டாரத்தையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த முடிவில் இருந்து அஜித் மாறுபடுவாரா? அல்லது பைக் டூர் முடித்து விட்டு ஏகே 62 படத்தில் நடிப்பாரா? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு வரும் மே 1ம் தேதி பதில் கிடைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











