கண்டிஷன் மேல் கண்டிஷன்... AK 62 அப்டேட் கொடுக்க முடியாமல் திணறும் லைகா..?: குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களுடன் வரவேற்புடன் சூப்பர் ஹிட் அடித்தது.

இதனையடுத்து லைகா தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக லைகா தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜித் - லைகா கூட்டணியில் ஏகே 62

அஜித் - லைகா கூட்டணியில் ஏகே 62

அஜித் நடிக்கவுள்ள அவரது 62வது படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்காக லைகா தரப்பில் இருந்து 200 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் திரைக்கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லாததால் அவர் ஏகே 62ல் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி சொன்ன கதையும் பிடித்திருந்ததால் அஜித், லைகா என இருதரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம். இதனால் விரைவில் ஏகே 62 அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இதுவரை ஏகே படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை.

கண்டிஷன் மேல் கண்டிஷன்

கண்டிஷன் மேல் கண்டிஷன்

இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அஜித் கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏகே 62 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்க வேண்டுமென கூறியதாக முதலில் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது படத்தை மொத்தமே 6 மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என கூறியுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் ஏகே 62 ஷூட்டிங் தொடங்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாராம். இதுதான் பட குழுவினரை தற்போது கலங்கடித்துள்ளதாம்.

பொறுமையின் சிகரம் மகிழ் திருமேனி

பொறுமையின் சிகரம் மகிழ் திருமேனி

ஆனால், மகிழ் திருமேனி படத்தை மிகவும் பொறுமையாக பார்த்து பார்த்து செதுக்கக் கூடியவர். இதனை கலகத் தலைவன் இசை வெளியீட்டில் உதயநிதியே மேடையில் கூறி மகிழ் திருமேனியை கிண்டலடித்திருந்தார். மகிழ் திருமேனி ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாகவும் யதார்த்தமாகவும் எடுக்க வேண்டும் என ரொம்பவே மெனக்கெடல் செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜித் நினைப்பதை போல அவசர அவசரமாக எடுத்தால் அது சரியாக வராது என நினைக்கிறார்களாம் தயாரிப்பு தரப்பு. இதனால் இதுகுறித்து அஜித்திடம் பேசிய தயாரிப்பு தரப்பினர், மகிழ் திருமேனியே அவருடைய இஷ்டத்திற்கு விட்டால்தான் படம் தரமாக வரும் என கூறியுள்ளார்களாம்.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

அதேபோல் ஏகே 62 ரிலீஸ் தேதியை ஷூட்டிங் முடியும் தருணத்தில் அறிவித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் அஜித் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏகே 62 படத்தை விஜய்யின் லியோவுடன் ஆயுத பூஜை ரிலீஸுக்கு களமிறக்க வேண்டும் என விரும்புவது தான் இந்த அவசரத்துக்கான காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் அடுத்தாண்டில் உலகம் முழுவதும் பைக் ட்ரிப் செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இதனால் தான் ஏகே 62 அப்டேட் வெளியாகாமல் இருப்பதாகவும், இது ரசிகர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X