பைக்கில் ரெடியாக காத்திருக்கும் அஜித்... AK 62 அப்டேட்டுக்காக மட்டும் தான் வெயிட்டிங்!

சென்னை: அஜித்தின் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ஏகே 62 படத்திற்காக தனது நீண்டநாள் கனவை ஒத்தி வைத்துவிட்டு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களின் வரவேற்போடு 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. இதனைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 ரெடியாக இருக்கும் அஜித்

ரெடியாக இருக்கும் அஜித்

அஜித் - மகிழ் திருமேனி இணையும் ஏகே 62 அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஏகே 62க்கு முன்பாகவே ரஜினி நடிப்பில் லைகா தயாரிக்கும் தலைவர் 170 அப்டேட் வெளியாகிவிட்டது. ஆனால், ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் கூட இன்னும் தெரியவில்லை. இதனிடையே அஜித்தும் தற்போது பைக் ட்ரிப் செல்ல ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 உலகம் முழுவதும் பைக் டூர்

உலகம் முழுவதும் பைக் டூர்

நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸிங், பைக் ரேஸிங், ட்ரோன் மேக்கிங், துப்பாக்கிச் சுடுதல் என சகலகலா வல்லவனாக வலம் வரும் அஜித், கடந்த சில வருடங்களாக பைக் டூரில் ஆர்வம் காட்டி வருகிறார். துணிவு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது காஷ்மீர், லடாக் பகுதிகளில் பைக் ட்ரிப் சென்றுவந்தார். அப்போது அவருடன் மஞ்சு வாரியரும் பைக் டூர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 அப்டேட்டுக்காக அஜித் வெயிட்டிங்

அப்டேட்டுக்காக அஜித் வெயிட்டிங்

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விரைவில் உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக அஜித் தனது மேனேஜர் மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி, ஏகே 62 ரிலீஸ் ஆனதும் உலகம் முழுவதும் பைக்கில் டூர் செல்ல அஜித் திட்டமிட்டிருந்தாராம். அதனால், அவர் ஏகே 62க்குப் பின்னர் ஓராண்டு எந்தப் படத்திலும் கமிட் ஆகப்போறதில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில், ஏகே 62 அப்டேட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் அஜித், அதன் பின்னரே பைக் ட்ரிப் பற்றி முடிவெடுக்கவுள்ளாராம்.

 லைகாவின் இறுதி முடிவு

லைகாவின் இறுதி முடிவு

ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கதை, திரைக்கதையை மகிழ் திருமேனி ரெடி செய்துவிட்டாலும், லைகா தான் தனது இறுதி முடிவை அறிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளாதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஏகே 62 குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X