வளர்ச்சி திட்ட வரைபடங்களுடன் ரெடியா இருக்கும் தல.. விசிறி இசை விழாவில் போட்டுடைத்த நடிகர் ஆரி!
நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான வளர்ச்சி திட்ட வரைபடங்களை அஜித் தயார் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் நடிகர்கள் தலையீடு என்பது புதிதல்ல. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பலருக்கும் அரசியலில் குதிக்கும் ஆசை மேலோங்கி வருகிறது.
ஏற்கனவே தமிழக அரசியல் ரேசில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் உள்ளனர். இதில் போர் வரும் பார்த்துக்கொள்ளலாம் என ரசிகர்களிடம் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அடுத்த கட்டத்தில் கமல்
ஆனால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் மத்திய மாநில அரசு விமர்சித்து விளாசி வருகிறார். எண்ணூர் துறைமுகத்தின் கழிமுகப்பகுதியை ஆய்வு செய்து களப்பணிக்கும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார் நடிகர் கமல்.

அஜித்தும் வருகிறாராம்
விஜய் சினிமா மூலம் அரசுகளின் திட்டங்களை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தும் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு வருவது உறுதி
சென்னையில் நடைபெற்ற விசிறி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி, அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அப்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் அவர்.

வரைபடங்களுடன் ரெடி
மேலும் தமிழகத்துக்கான வளர்ச்சி திட்ட வரைபடங்களை அஜித் தயார் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் உள்ளதுபோன்ற மாற்றங்களை கொண்டுவர அஜித் திட்டமிட்டுள்ளார் என்றும் நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
உற்சாகத்தில் ரசிகர்கள்..
இதனை அஜித்துக்கு நெருக்கமான ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், யாரிடம் பகிர வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்த ஆரி அனைத்தையும் உளறி கொட்டினார். அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஆரி தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











