Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித்துக்கு அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க... அப்படி நடந்து கொள்வார்னு எதிர்பார்க்கல எஸ் எஸ் ராஜமெளலி!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது
அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி அஜித்துக்கு அவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இப்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என பிரபல தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்
கொலைவெறியில்
கீர்த்தி
சுரேஷ்…மிரட்டும்
சாணி
காயிதம்
ட்ரெயிலர்

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்
சிறுத்தை சிவா கூட்டணியில் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வந்த அஜித் குமார் அடுத்ததாக இணைந்தது இயக்குனர் ஹெச். வினோத் உடன். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வினோத் முதல் முறையாக அஜித் உடன் இணைந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியானது. இதில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசப்பட்டு இருந்தது.

பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகள்
அஜித்- வினோத் கூட்டணியில் வெளியான முதல் படமே வெற்றிப் பெற்ற நிலையில் இரண்டாவதாக இணைந்த படம் வலிமை. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வந்த வலிமை சமீபத்தில் வெளியாகியது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பைக் ரேசிங் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வலிமை ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை. பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகள் எனது படத்தில் பாராட்டுகளைப் பெற்றது.

மீண்டும் வினோத் இயக்கத்தில்
வலிமை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியானது.

அறிமுகம் செய்துகொண்டார்
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு நாள் ஹோட்டலில் ராஜமெளலி தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார் அப்போது பக்கத்து டேபிளில் அஜித்குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ராஜமௌலியை அழைத்து பேசியுள்ளார். அருகில் உட்கார்ந்தவர் ராஜமெளலியின் மனைவி என்று தெரிந்த பிறகு எழுந்து நின்று நான் அஜித் குமார் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.

அப்படி நடந்து கொள்வார்னு எதிர்பார்க்கல
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நடிகர் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் என்னுடைய குடும்பத்தாரிடம் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் ரசிகர்களிடம் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் அஜித் குமார் அல்லது ஏகே என அழைத்தாலே போதுமானது எனக் கூறியது எனக்கு மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அஜித் மீதான மரியாதை பல மடங்கு கூடியது என எஸ்எஸ் ராஜமெளலி தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்